அவசர சிகிச்சை பிரிவில் குழந்தைகள்?...கவலையில் நயன்தாரா!..நடப்பது என்ன?...
திருமணமாகி 4 மாதத்தில் நயன்தாராவுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்ததுதான் தற்போது சமூகவலைத்தளங்களில் பெரிதும் விவாதிக்கப்பட்டு வருகிறது.
ஆனால், வாடகைத்தாய் மூலமே பிறந்தது என்கிற செய்தி பின்னரே வெளியாகி குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது. ஒருபக்கம், சட்டத்தை மீறி விக்கி-நயன் இருவரும் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுள்ளதாக சர்ச்சையும் எழுந்துள்ளது.
இந்நிலையில், அந்த இரண்டு குழந்தைகளுக்கும் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகசெய்திகள் கசிந்துள்ளது. அதாவது, அந்த குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறந்துள்ளது. எனவே, சரியான வளர்ச்சி இல்லாததால் இன்னமும் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.
அனேகமாக இன்னும் ஓரிரு மாதங்கள் குழந்தைகள் மருத்துவமனையில் மருத்துவர்களின் பராமரிப்பில் இருக்கும் என கணிக்கப்படுகிறது. இந்த விவகாரம் நயன்தாராவுக்கு கவலையை அளித்துள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து செய்திகள் கசிந்துள்ளது.