30 நிமிடம் காத்திருந்து!.. விதவிதமா ஆர்டர் பண்ணி வெளுத்து கட்டிய நயன்?.. அதுவும் இப்படி ஒரு இடத்திலயா?...

by ramya suresh |   ( Updated:2024-11-22 06:47:00  )
nayan
X

nayan

நடிகை நயன்தாரா தனது கணவருடன் மும்பை ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்ட வீடியோவானது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற படத்துடன் வலம் வருவபவர் நடிகை நயன்தாரா. தொடர்ந்து சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வரும் இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் தனுஷ் குறித்து காட்டமாக பேசி வெளியிட்டு இருந்த அறிக்கையானது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்த அறிக்கையை பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

இதையும் படிங்க: Biggboss Tamil: சோத்துல உப்பு இல்லையா? சவுந்தர்யா, சிவாவை தரக்குறைவாக பேசும் போட்டியாளர்கள்…

மேலும் தனுஷ் ரசிகர்கள் நயன்தாராவை ட்ரோல் செய்து வருகிறார்கள் இது ஒரு புறம் இருக்க கடந்த நவம்பர் 18ஆம் தேதி அவரின் பிறந்த நாளை முன்னிட்டு netflixல் நயன்தாராவின் டாக்குமென்டரி படம் வெளியானது. ஆனால் இப்படம் ரசிகர்களை அந்த அளவுக்கு கவரவில்லை என்று கூறி வருகிறார்கள். இந்த முறை தனது பிறந்த நாளை டெல்லி மற்றும் மும்பை உள்ள பகுதிகளில் கொண்டாடியிருந்தார்.

பின்னர் நேற்று சென்னை திரும்பிய நயன்தாரா ஆகாஷ் பாஸ்கரன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியில் தனுஷும் கலந்து கொண்டிருந்தார். இதில் இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளும் சம்பவம் அரங்கேறி இருந்தது. அது மட்டும் இல்லாமல் இருவரும் மிக அருகில் அடுத்தடுத்த இருக்கையில் அமர்ந்திருந்தார்கள். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வந்தது.

இந்நிலையில் நடிகை நயன்தாராவின் மற்றொரு வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் டெல்லியில் இருக்கும் ஹோட்டலுக்கு நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனை அழைத்துச் சென்று சாப்பிடுகின்றார். விதவிதமான உணவுகளை ஆடர் செய்து அவர் சாப்பிடும் வீடியோவானது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகின்றது.

நயன்தாரா தனது டாக்குமென்டரி படத்தில் கூட உடலை பிட்டாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தாலும் அதற்காக வெறித்தனமான டயட்டை பின்பற்ற மாட்டேன். ஒர்க்அவுட் செய்ய மாட்டேன். நான் ஒரு சரியான சாப்பாட்டு பிரியர். மேலும் லோக்கல் தள்ளுவண்டி கடை முதல் ஹைடெக் ஹோட்டல் வரை சென்று சாப்பிட்டு இருக்கின்றேன் என்று கூறியிருந்தார்.

இதையும் படிங்க: ரஜினியை சந்தித்த சீமான்… விஜய் அரசியலுக்குள் இறங்கி அதிரடி காட்டியதுதான் காரணமா?

அந்த வீடியோவில் கூறியது போல ஒரு சாதாரண ஹோட்டலுக்கு சென்று அரை மணி நேரம் லைனில் காத்திருந்து உணவு ஆர்டர் செய்து நடிகை நயன்தாரா சாப்பிட்டு இருக்கின்றார். யார் என்றே தெரியாத ஒரு நபர் இந்த வீடியோவை எடுத்து அதனை சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு இருக்கின்றார் இந்த வீடியோவை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் விக்னேஷ் சிவன் அந்த நபருக்கு நன்றியையும் தெரிவித்து இருக்கின்றார். இந்த வீடியோவானது தற்போது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகின்றது.

Next Story