இவங்க இல்லைனா அதோ கதிதான்.. எங்க போனாலும் நயனை ஃபாலோ செய்யும் அந்த மூணு நபர்
Actress Nayanthara: தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகையாக இருந்து வருபவர் நடிகை நயன்தாரா. தென்னிந்திய நடிகைகளிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் நயன்தாராவும் ஒருவர். லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் சும்மா கெத்தா வலம் வந்து கொண்டிருக்கின்றார் நயன். ஐயா என்ற படத்தின் மூலம் சரத்குமாருக்கு ஜோடியாக அறிமுகமான நயன்தாரா இரண்டாவது படத்திலேயே ரஜினிக்கு ஜோடியானார்.
அதைத் தொடர்ந்து விஜய் அஜித் சிவகார்த்திகேயன் என அடுத்தடுத்த டாப் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து இன்று ஒரு தவிர்க்க முடியாத நடிகையாக மாறி இருக்கிறார். நடிகையாக மட்டுமல்லாமல் ஒரு தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். இவருடைய தயாரிப்பில் பல சூப்பர் ஹிட் படங்கள் வெளிவந்திருக்கின்றன. இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நயன் இப்போது இரு குழந்தைகளுக்கு அம்மாவாகவும் இருக்கிறார்.
இதையும் படிங்க: நேத்து வரைக்கும் கோயில்ல உருண்ட நாட்டாமை! இன்னிக்கு எங்க இருக்காரு பாருங்க.. இதுவும் முக்கியம்ல
குழந்தை பிறந்த பிறகு குடும்பத்தை கவனிப்பதில் அதிக அக்கறை செலுத்தி வருகிறார் நயன்தாரா. ஒரு பக்கம் சினிமா இன்னொரு பக்கம் குடும்பம் குழந்தைகள் என ஒரு பொறுப்புள்ள குடும்ப பெண்ணாக நடந்து வருகிறார் .இந்த நிலையில் தற்போது நயன் மற்றும் விக்னேஷ் சிவன் தன்னுடைய குழந்தைகளுடன் ஹாங்காங் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கின்றனர்.
இந்த நிலையில் வெளிநாடு செல்லும் போதெல்லாம் நயனுடன் மூன்று பேர் செல்வது வழக்கம் என்பதை பற்றிய ஒரு செய்தி வைரலாகி வருகின்றது. அதாவது குழந்தைகளுடன் எங்கெல்லாம் நயன் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாரோ கூடவே மூன்று செவிலியர்களையும் அழைத்துக் கொண்டு போகிறாராம்.
இதையும் படிங்க: இது கமலோட ஃபேவரைட் நடிகையாச்சே! ‘கூலி’ படத்தில் நாயகியாகும் பிரபலமான பேருள்ள நடிகை
அதுமட்டுமல்லாமல் அதிக லக்கேஜ்களையும் எடுத்துக்கொண்டு செல்கிறாராம் .ஒரு வேளை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது குழந்தைகளுக்கு ஏதாவது ஒன்று நடந்தால் திடீரென முதலுதவி செய்வதற்கு என அந்த செவிலியர்களை தன்னுடனே வைத்திருக்கிறாராம் நயன். எங்கு போனாலும் இவர்கள் இல்லாமல் போவதில்லை என்று சொல்லப்படுகிறது.
அந்தளவுக்கு தன் குழந்தைகள் மீது மிகுந்த கவனத்துடன் இருந்து வருகிறாராம். அவர் போடும் வீடியோக்கள் புகைப்படங்களை பார்க்கும் போதே எந்தளவுக்கு பாசத்துடன் இருக்கிறார் என்பதை நம்மால் உணர முடிகிறது.
இதையும் படிங்க: OMG! ஏமிக்கு இவ்ளோ பெரிய பையனா? கூடவே காதலருடன் உல்லாசம் வேற.. மஜாதான்..வைரலாகும் புகைப்படம்