Connect with us
actress nayanthara

Cinema News

பக்காவா செட்டில் ஆகப்போகும் நயன்…தமிழ் படத்துக்குதான் கிராக்கி பண்ணுவாங்க அம்மணி…

Actress Nayanthara: நயன்தாரா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாய் வலம் வருபவர். இவர் ஐயா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அறிமுகமான முதல் படத்திலேயே இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார். மேலும் இவர் தமிழ், மலையாளம், ஹிந்தி என பிற மொழிகளிலும் நடித்துள்ளார்.

ஐயா படத்தை தொடர்ந்து இவர் சந்திரமுகி, சிவகாசி, கள்வனின் காதலி போன்ற பல திரைப்படங்களில் நடித்தார். ஆனால் இப்படங்களில் இவர் முதன்மை நாயகியாக நடிக்கவில்லை. பின் இவர் நடித்த சில திரைப்படங்கள் இவருக்கு கை கொடுக்காத நிலையில் நடிகர் சிலம்பரசனுடன் இணைந்து நடித்த வல்லவன் திரைப்படம் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது.

இதையும் வாசிங்கள்:அவங்களால முடிஞ்சிது உங்களால ஏன் முடியல? சன் பிக்சர்ஸை வறுத்தெடுத்த ரஜினிகாந்த்..!

இப்படம் வெளியான போது இவருக்கும் சிம்புவிற்கும் காதல் இருப்பதாக பேசப்பட்டது. பின் இவர் அஜித்துடன் இணைந்து பில்லா, ஆர்யாவுடன் இணைந்து பாஸ் என்ற பாஸ்கரன் போன்ற திரைப்படங்களில் நடித்தார். இப்படங்களும் இவருக்கு நல்ல வெற்றியை சம்பாதித்து கொடுத்தன. பின் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

அறம், ஓ2 போன்ற திரைப்படங்களின் மூலம் கதாநாயகன் இல்லாமலும் நடிக்க முடியும் எனும் கண்ணோட்டத்தை உருவாக்கினார். இவர்  பின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் வெகுவிமர்சியாக நடைபெற்றது. திருமணத்திற்கு பின்னும் இவர் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இதையும் வாசிங்கள்:புண்ணியவான் கொடுத்த ஒரு பேட்டி! என் மொத்த வாழ்க்கையும் போச்சு – விஷாலால் டோட்டல் வாஷ் அவுட் ஆன நடிகர்

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம்தான் ஜவான். இத்திரைப்படத்தினை இயக்குனர் அட்லி இயக்கினார். இப்படத்தில் நயனுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நட்சத்திரமான ஷாருக்கான் நடித்திருந்தார். இப்படம் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்தது. இப்படத்திற்கு பின் இவர் தமிழ் படங்களை  விட ஹிந்தி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகின.

பாலிவுட்டின் பிரபல இயக்குனரான சஞ்சய் லீலா பன்சாலி அடுத்ததாக இயக்கவுள்ள திரைப்படத்தில் நயன் நடிக்கவுள்ளாராம். இதற்காக இவர் சம்பளமாக 10 கோடி கேட்டுள்ளாராம். ஆனால் தற்போது தமிழ் படங்களை புறக்கணித்து வரும் நயன்தாரா ஹிந்தி திரைப்படங்களில் நடிக்க முக்கியத்துவம் கொடுப்பது நெட்டிசன்களிடம் சற்று அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

இதையும் வாசிங்கள்:லோகேஷுக்கு ஏழரையே இவன் தான்!.. அந்த இயக்குனரை போட்டு பொழக்கும் அஜித் ரசிகர்கள்.. என்ன காரணம்?

google news
Continue Reading

More in Cinema News

To Top