இளசுகளே ரெடியா இருந்துக்கோங்க! சூர்யா படத்தில் இணையும் எக்ஸ்பிரஷன் குயின்! ஜோடி பொருத்தம் சூப்பர்

Surya: தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. சினிமாவையும் தாண்டி சமூக நலன் சார்ந்த பல செயல்களையும் செய்து வருகிறார். தன்னுடைய ரசிகர்களின் நலனை தன் நலனகாக கருதி வருபவர் சூர்யா.

ரசிகர் மன்றம் சார்பாக எந்த ஒரு உதவி கேட்டாலும் தயங்காமல் செய்யும் ஒரு நல்ல நடிகராகவும் மாணவ நலனில் அக்கறை கொண்ட நடிகராகவும் திகழ்ந்து வருகிறார். ஒரு பக்கம் நடிப்பு, தயாரிப்பு என தன்னை எப்பொழுதுமே பிஸியாக வைத்து வருகிறார்.

இதையும் படிங்க: தலைய காட்டுனாலே 8 கோடி! கோலிவுட்டின் சொகுசு நடிகையாக வலம் வரும் நயன்தாரா..

தற்போது சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படம் 12 மொழிகளில் ஒரு பேன் இந்தியா படமாக பெரும் பொருட்செலவில் தயாராகி வருகிறது. அந்தப் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

கங்குவா படத்திற்கு பிறகு சூர்யா வெற்றிமாறனுடன் இணைந்து வாடி வாசல் திரைப்படத்திலும் சுதா கொங்காராவுடன் ஒரு புதிய படத்திலும் இணைய இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின.

இதையும் படிங்க: கவர்ச்சி காட்டி காசு பார்த்த 5 நடிகைகள்!.. சத்தமே இல்லாம சாதிச்சி காட்டிய சமந்தா…

இந்த நிலையில் சுதா கொங்கராவுடனான படத்தில் சூர்யாவுடன் இணைந்து ஒரு ப்யூட்டி குயின் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அவர் வேறு யாருமில்லை. நடிகை நஸ்ரியாதான். ஒரு காலத்தில் இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்தவர் நஸ்ரியா.

நடித்தது என்னமோ ஒரு சில படங்களே என்றாலும் தன் எக்ஸ்பிரஷன் மூலமாக அனைவரையும் ஆட்டிப்படைத்தார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் தலை காட்டாதவர் சமீபகாலமாக தெலுங்கு படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

இதையும் படிங்க: வடிவேலு அப்பவே அப்படிப்பட்ட ஆளு! என்னங்கடா இது? பல திடுக்கிடும் தகவலை பகிர்ந்த ஹீரோயின்

இப்போது ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழில் களம் இறங்குகிறார். சூர்யாவுடன் இந்தப் படத்தில் இணைந்திருப்பதாக தகவல்கள் வந்திருக்கின்றன. அதுமட்டுமில்லாமல் நடிகர் துல்கர் சல்மானும் இந்தப் படத்தில் நடிக்கப்போவதாகவும் சொல்லப்படுகிறது.

 

Related Articles

Next Story