ஐயோ அழகு செல்லம் அள்ளுது!.. வாலிப பசங்களை மயக்கும் நஸ்ரியா...
கேரளாவில் இருந்து தமிழுக்கு வந்த துறுதுறு நடிகைகளில் நடிகை நஸ்ரியாவும் ஒருவர். மீரா ஜாஸ்மின் போலவே குழந்தை போன்ற முகம் மற்றும் க்யூட் எக்ஸ்பிரசன்களால் கோலிவுட் ரசிகர்களின் மனதில் குடியேறியவர் இவர்.
மலையாள திரைப்படங்களில் சிறுமியாக சில படங்களில் நடித்த நஸ்ரியா அதன்பின் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்தவர்.
குறிப்பாக இவர் நடித்த ‘பெங்களூர் டேஸ்’ திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பிடித்த திரைப்படமாகும்.
தமிழில் நேரம், ராஜா ராணி, நையாண்டி என சில படங்களில் நடித்தார். மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். ஆனாலும், நல்ல கதைகளில் மட்டும் நடித்து வருகிறார்.
மேலும், சக நடிகைகளை போல நஸ்ரியாவும் சமூகவலைத்தள பக்கங்களில்தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் நஸ்ரியாவின் புதிய புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.