கேலி கிண்டலுக்கு ஆளான கணவர் - 15 வருட பந்தம்! தலைகீழான நீலிமாவின் வாழ்க்கை

by Rohini |
neelima
X

neelima

சின்னத்திரையில் ஒரு காலகட்டத்தில் கொடி கட்டி பறந்தவர் நடிகை நீலிமா ராணி. சின்னத்திரை ரம்யா கிருஷ்ணன் என்று ரசிகர்கள் பலரும் அவரை அழைக்க தொடங்கினார்கள். அந்த அளவுக்கு வாணி ராணி சீரியலில் டிம்பிள் ஆக ஒரு திமிர் பிடித்த கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் அதிக வரவேற்பை பெற்றார் நீலிமா. குழந்தை நட்சத்திரமாகவே நடித்து அதன் பின் சீரியலில் ஒரு முன்னணி நடிகையாக மாறினார்.

10 வயது வித்தியாசம்

அவருடைய திருமணம் அனைவருக்கும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில் 10 வயது வித்தியாசம் உடைய தனது கணவரை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று சொன்னதும் நீலிமாவின் குடும்பம் முதலில் தயங்கியது. ஆனால் அதன் பிறகு நீலிமாவும் அவருடைய கணவர் இசைவாணனும் அவர்களின் குடும்பத்தை சம்மதிக்க வைத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் ஆன ஆறு மாதங்களில் நீலிமா அவரது தந்தையை இழந்தார்.

neelima1

neelima1

நீலிமாவுக்கு ஒரே ஒரு சகோதரன். தந்தை இறந்த சமயத்தில் அவருடைய சகோதரன் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்க இனிமேல் "என்னுடைய அம்மாவிற்கும் என் தம்பிக்கும் அப்பாவாக இருந்து நான் தான் கவனித்துக் கொள்ள வேண்டும்" என்று தன்னுடைய கணவரின் குடும்பத்தாரிடம் சொல்லி நீலிமா அவரது அம்மாவையும் தம்பியையும் தன்னுடனே வைத்து பார்த்துக் கொண்டார். அதுமட்டுமில்லாமல் தன் கணவரிடம் "என் தம்பியை ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வர வரைக்கும் நமக்கு குழந்தை வேண்டாம்" என்றும் சொல்லி இருக்கிறார். அதற்கு அவருடைய கணவரும் சம்மதித்திருக்கிறார்.

கோடிக் கணக்கில் இழப்பு

இப்படி எல்லா விதத்திலையும் தன் கணவரின் துணையோடு தன் வாழ்க்கையை நடத்தி இருக்கிறார் நீலிமா .ஒரு கட்டத்தில் நீலிமாவும் அவரது கணவரும் தயாரிப்பு பணியில் இறங்க 4 கோடி 56 லட்சம் செலவில் ஒரு படத்தை தயாரித்து இருக்கின்றனர். ஆனால் சில பல பிரச்சனைகளால் அந்த படம் அப்படியே கிடப்பில் போய்விட அவருக்கு அந்த 4 கோடி இழப்பாகிவிட்டது.

அதனால் வீட்டையும் இழந்து எல்லாவற்றையு இழந்து கட்டியிருந்த தாலி செயினுடன் தான் இருந்திருக்கிறார். அதன் பிறகு கணவரின் வீட்டில் தான் சில காலம் தங்கியிருந்தார்களாம். பின்னர் அந்த வீட்டையே வாங்கியிருக்கிறார்கள். இப்படி தொடர்ந்து அடி மேல் அடி நீலிமாவின் வாழ்க்கையில்.

neelima2

neelima2

இது ஒரு புறம் இருக்க நீலிமா தன் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டால் ரசிகர்களின் கமெண்ட் மிக மோசமாக இருக்கும். அதாவது நீலிமாவின் கணவர் பார்ப்பதற்கு ஒரு வயதான தோற்றத்தில் இருக்கக்கூடியவர். சால்ட் அண்ட் பேப்பர் லுக்கில்தான் எப்பொழுதும் இருப்பார். அதை பார்த்து இது உங்களுடைய அப்பாவா என நிறைய பேர் ட்ரோல் செய்து இருக்கின்றனர். அதன் காரணமாகவே நீலிமாவின் கணவர் பொது விழாக்களில் கலந்து கொள்ள மாட்டாராம்.

இதையும் படிங்க : மெய்யப்ப செட்டியாரை ஏமாற்றிய ஏவிஎம் குமரன்! ‘களத்தூர் கண்ணம்மா’வில் நடந்த ஆள்மாறாட்டம்

முன்னுதாரணமாக வாழும் நீலிமா

நீலிமா மட்டும் தன் குழந்தைகளுடன் அந்த விழாவிற்கு சென்று வருவாராம். இப்படியே கேலியும் கிண்டலுமாக அவர்களது வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கின்றது. ஆனால் இதையெல்லாம் தாண்டி அவரது கணவரும் நீலிமாவும் கிட்டத்தட்ட 15 வருட திருமண வாழ்க்கையை மிகவும் மகிழ்ச்சிகரமாக நடத்திக் கொண்டு வருகின்றனர் என்றால் அதற்கு முக்கிய காரணம் புரிதலும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தலும் ஆகும். ஆனால் இன்னொரு புறம் வெறும் 15 நாட்களில் குடும்பம் நடத்தி மாறி மாறி புகாரை கூறி இன்று கோர்ட் வாசலில் வந்து நிற்கின்றனர் சின்னத்திரை பிரபல ஜோடியான சம்யுக்தாவும் விஷ்ணுகாந்தும். இவர்களுக்கு எல்லாம் ஒரு உதாரணமாக இருக்கிறார் நீலிமா ராணி.

Next Story