
Cinema News
எனக்கு அது பெருசுதான்!. குழந்தைக்கு ஃபீடிங் செய்வதை கூட!.. வேதனையை பகிர்ந்த நீலிமா!
கமல் நடித்த தேவர் மகன் படத்தில் சிவாஜியின் பேரனாக நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் நீலிமாராணி. இவர் தொடர்ந்து ஒரு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். அதன் பின்னர் சீரியல்களில் வாய்ப்புகள் கிடைக்க 1998-ம் ஆண்டு ஒரு பெண்ணின் கதை என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகம் ஆனார்.
பின்னர் மெட்டி ஒலி, கோலங்கள் என போன்ற சீரியல்கள் மூலம் நீலிமா மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார். அதன் பின்னர் நான் மகான் அல்ல திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த துணை நடிகைக்கான விருது வென்றார். தொடர்ந்து, சீரியல் திரைப்படம் என பிசியாக நடித்து வரும் நீலிமா சமீபத்திய பேட்டி ஒன்றில்,
சிலர் என்னை தவறாக விமர்சிக்கிறார்கள். குறிப்பாக எனது உடல் எடை குறித்து கொச்சையாக கமெண்ட்ஸ் செய்கிறார்கள். என்னுடைய 2-வது குழந்தை பிறந்தவுடன் நான் அதிக வெயிட் போட்டுவிட்டேன். அதனால் என்னுடைய மார்பகங்கள் பெரிதாக இருப்பதாக கூறுகிறார்கள்.
இது என்னை மிகவும் வேதனைக்குள்ளாகிவிட்டது. நான் என் குழந்தைக்கு பால் கொடுத்துக்கொண்டிருக்கிறேன் அதனால் தான் அப்படி ஹார்மோன்ஸ் மாற்றம் ஆகிறது. அவரக்ளுக்கு சொல்லி புரியவைக்க விரும்பவில்லை விட்டுவிடுங்கள். இதுபோன்று என்னை தவறாக விமர்சிப்பது குறித்து நான் கவலைப்படுவதில்லை. அவர்கள் மனநல மருத்துவமனைக்கு தான் போக வேண்டும் என செம கூலாக பதில் அளித்தார்.