எதை வாங்குறதுன்னே தெரியல.. எல்லாமே செமயா இருக்கு! - நிரஞ்சனா செய்த ஷாப்பிங் வீடியோ
சத்தியமா கண்ட்ரோல் பண்ண முடியல எல்லாமே அவ்வளவு சூப்பரா இருக்கு என ஆசை ஆசையாக ஷாப்பிங் செய்துள்ளார் நிரஞ்சனா.
தமிழ் சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகையாக வலம் வருபவர் நிரஞ்சனா. ஜீ தமிழில் வித்யா நம்பர் ஒன் சீரியலில் பிரீத்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இது மட்டுமில்லாமல் பல்வேறு சீரியல்களில் நடித்துள்ள இவர் தற்போது சென்னை தி.நகரில் உள்ள வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் ஷாப்பிங் செய்துள்ளார்.
புத்தாண்டு மற்றும் பொங்கல் தள்ளுபடி விற்பனை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது நிரஞ்சனா இந்த கடையில் ஷாப்பிங் செய்துள்ளார்.
ஏற்கனவே எக்கச்சக்கமான திரை உலக பிரபலங்கள் ஷாப்பிங் செய்து ஆடைகளை அள்ளிச்சென்ற நிலையில் தற்போது நிரஞ்சனாவும் விலையைக் கேட்டு வியப்படைந்துள்ளார்.
என்னால கண்ட்ரோல் பண்ணவே முடியல எல்லாமே அவ்வளவு அழகா இருக்கு. பொண்ணுங்க கிட்ட சாரி பத்தி பேசி பாருங்க கண்டிப்பா அவங்களுக்கு பிடிக்கும் என லவ் டிப்ஸ் எல்லாம் இடையில் கொடுத்துள்ளார்.