எந்த வயசுல நடந்தா என்ன? ‘லால் சலாம்’ படத்தில் தலைவரோடு டூயட் பாடப் போகும் அந்த நடிகை!

rajini
தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் என்ற அடையாளத்தோடு கிட்டத்தட்ட 30 வருடத்திற்கும் மேலாக தமிழ் சினிமாவையே ஆட்டிப்படைத்து வருகிறார். இன்றைய தலைமுறை நடிகர்களோடு போட்டி போட்டுக் கொண்டு தன் கெத்தை காட்டி வருகிறார் ரஜினி.
70 வயதை கடந்தாலும் இன்னும் அவரால் டூயட் பாட முடிகிறது, ஃபைட் போட முடிகிறது. அவரை பின்பற்றி ஏராளமான நடிகர்கள் சினிமாவை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.வசூலை அள்ளுவதில் அன்றிலிருந்து இன்று வரை ரஜினிதான் முதலிடம்.

rajini1
அவரை தொடர்ந்து தான் மற்ற நடிகர்கள்.தற்போது ரஜினியின் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்படுவது நெல்சன் இயக்கத்தில் அமைந்த ஜெய்லர் திரைப்படம்தான். அந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
அதனை தொடர்ந்து மகள் ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் லால்சலாம் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கிறார். அந்தப் படத்தில் முஸ்லீம் பாய் கேரக்டரில் நடிக்கும் ரஜினிக்கு ஜோடியாக 80களில் முன்னனி நடிகையாக இருந்த ஒருவர்தான் நடிக்க இருக்கிறாராம்.
அவர்தான் நடிகை நிரோஜா. அவருடைய ஆசையே ரஜினியோடு நடிக்க வேண்டுமென்பது. கமல் மற்றும் மற்ற நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த நிரோஜா ரஜினியுடன் மட்டும் இதுவரை நடித்ததில்லை. அந்த கனவு இப்போது நிறைவேறியிருக்கிறது.

nirosha
இந்த லால்சலாம் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நிரோஜா நடிக்கிறாராம். இந்தப் படத்தை அடுத்து ஜெய்பீம் இயக்குனரான த.ச.ஞானவேல் இயக்கத்திலும் ஒரு புதிய படத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.