மித்ரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் திருச்சிற்றம்பலம். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். மேலும் தனுஷ்க்கு ஜோடியாக நித்யா மேனன், ராஷிகண்ணா, பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்திருந்தனர்.
படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தனுஷுடன் பிரகாஷ் ராஜ், பாரதிராஜா ஆகியோரும் இணைந்து நடித்தது கூடுதல் சிறப்பு. படத்திலுள்ள அத்தனை பாடல்களும் ரசிகர்கள் மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது.
https://www.youtube.com/watch?v=JKjiCDQOXi4
அதிலும் குறிப்பாக தாய்கிழவி பாடல் பட்டித்தொட்டியெல்லாம் ஒலித்து ரசிகர்களை குத்தாட்டம் போட வைக்கின்றது. அந்த அளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நித்யாமேனன் நேற்று சன் பிக்சர்ஸ் இன்ஸ்டா பக்கத்தில் இருந்து நேரலையாக ரசிகர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தார்.
அப்போது ஒரு ரசிகர் நித்யா மேனனை தாய் கிழவி என்று அழைத்தார். அதை பார்த்ததும் நித்யா மேனன் தயவு செய்து என்னை அப்படி அழைக்காதீர்கள் மேலும் அந்த தாய்கிழவி என்ற பெயர் எனக்கு பிடிக்காது எனவும் கூறி இனிமேல் அப்படி கூப்பிடாதீர்கள் என்று கூறினார்.
Rajinikanth: அபூர்வ…
தமிழ்த்திரை உலகில்…
நடிகை கீர்த்தி…
புஷ்பா 2…
நடிகர் கவின்…