More
Categories: Cinema History Cinema News latest news

நிவேதா தாமசுக்கு போராளி படத்தில் வாய்ப்பு கிடைத்தது எப்படி தெரியுமா?- சமுத்திரக்கனி சொல்லும் ரகசியம்

தற்போதெல்லாம் சினிமாவில் வாய்ப்பு கிடைப்பது என்பது குதிரைக்கொம்பாக உள்ளது. நடிகைகள் என்றால் அட்ஜஸ்ட்மெண்ட் தேவைப்படுகிறது. இந்நிலையில் ரஜினி, கமலுக்கு மகளாக நடித்த பிரபல நடிகை நிவேதா தாமஸ்சுக்கு போராளி படத்திற்கான வாய்ப்பு எப்படி கிடைத்தது என்று பார்ப்போம். அதற்கு முன்பாக அவரது வாழ்க்கைக்குறிப்புகளையும் சேர்த்தே பார்த்து விடுவோம்.

கேரளாவில் உள்ள கண்ணூரில் 2.11.1995ல் நிவேதா தாமஸ் பிறந்தார். பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை சென்னையில் முடித்தார். தனது 8வது வயதிலேயே சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்து விட்டார்.

Advertising
Advertising

சன்டிவியில் மைடியர் பூதம் தொடரில் கௌரி என்ற குட்டிப் பாப்பாவாக நடித்தார். சிவமயம், ராஜ ராஜேஸ்வரி, அரசி என பல தொடர்களில் நடித்தார். 2008ல் ஜெயராம் நடித்த வெறுத்தே ஒரு பாரியா என்ற மலையாளப் படத்தில் அவரது மகளாக நடித்து அறிமுகமானார். அதே ஆண்டில் தமிழில் குருவி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்தார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் நடித்துள்ளார். 2011ல் சசிகுமார் நடித்து சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளியான போராளி படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றார். சமுத்திரக்கனி டிவியில் அரசி நாடகத்தைப் பார்த்துள்ளார். அதில் இவரது நடிப்பைப் பார்த்து அசந்து போய் தனது படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தாராம்.

2013ல் நவீன சரஸ்வதி சபதம் படத்தில் ஜெய்க்கு கதாநாயகியாக நடித்தார். 2014ல் ஜில்லா படத்தில் மோகன்லாலுக்கு மகளாகவும், விஜய்க்கு தங்கையாகவும் நடித்து அசத்தினார். 2015ல் உலகநாயகன் கமலுடன் இணைந்து பாபநாசம் படத்தில் நடித்தார். கமலின் மகளாக வந்து நடித்த இவரது நடிப்பைப் பாராட்டாதவர்களே இல்லை எனலாம். செம மாஸான நடிப்பு.

Pabanasam

பாபநாசத்திற்கு முன்பே வெளியான அதன் மலையாளப் படம் த்ரிஷ்யம். இந்தப் படத்திலே நடிப்பதற்கு நிவேதாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது இவருடைய தேர்வு காரணமாக அதை மிஸ் பண்ணினாராம். 2016ல் தெலுங்கில் வெளியான ஜென்டில்மேன் படத்தில் நானிக்கு ஜோடியாக நடித்தார். இந்தப் படத்திற்காக சிறந்த அறிமுக நாயகிக்கான சைமா விருது கிடைத்தது.

2020ல் சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த தர்பார் படத்தில் அவரது மகளாக நடித்தார். தைரியமான அதே நேரம் அன்பான மகளாக வந்து சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். மலையாளம், தெலுங்கு அளவுக்கு தமிழில் இவரது வளர்ச்சி இல்லை. தற்போது 6 தெலுங்கு படங்கள் இவரது கைவசம் உள்ளன. இவரது கடின உழைப்பே வெற்றியின் ரகசியம். தமிழிலும் இவர் ஜெயிக்க வேண்டும் என்பதே இவரது ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

Published by
sankaran v

Recent Posts