அழகாலே கொல்லுறியே!.. மனசத்தான் அள்ளுறியே!.. ஓவியாவை பார்த்து சொக்கிப்போன ரசிகர்கள்…

Published on: August 30, 2023
oviya
---Advertisement---

கேரளாவை சேர்ந்தவர் ஓவியா. விமல் ஹீரோவாக நடித்து ஹிட் அடித்த களவாணி திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். அதன்பின் சில திரைப்படங்களில் நடித்தார். ஆனால், நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்காமல் கிடைக்கும் வாய்ப்புகளிலெல்லாம் நடித்து மார்க்கெட்டை இழந்தார்.

oviya

தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். மெரினா, கலகலப்பு, மூடர் கூடம், மத யானை கூட்டம், புலிவால், யாமிருக்க பயமேன் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார். ஆனால், சினிமாவில் நடித்து இவருக்கு கிடைக்காத புகழ் பிக்பாஸ் என்கிற ஒரு நிகழ்ச்சியில் கிடைத்தது.

oviya dp
oviya dp

மனதில் பட்டதை பேசும் தைரியம், எதையும் ஜாலியாக எடுத்துக்கொள்ளும் குணம், குழந்தைத்தனமான பேச்சு என ரசிகர்களுக்கு ஓவியாவை பிடித்துப்போனது. இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது ஓவியா ஆர்மியெல்லாம் உருவானது. இவருக்கு கிடைத்த புகழை பார்த்துதான் பல பிரபலங்களுக்கும் பிக்பாஸ் வீட்டிற்கு போக வேண்டும் என்கிற ஆசையே வந்தது.

இதையும் படிங்க: குடிக்க ஆரம்பிச்சா எக்ஸ்ட்ரீமுக்கு போயிடுவேன்!.. அட்ஜெஸ்ட்மென்ட்டுக்கு கூப்பிடுவாங்க!.. உறைய வைத்த ஓவியா!..

oviya

ஆனால், ஓவியாவுக்கு பின் அவரளவுக்கு யாரும் பிரபலமாகவில்லை என்பதே நிஜம். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் 90 எம்.எல்., கணேசா மீண்டும் சந்திப்போம், ஓவியாவை விட்டா யாரு, களவாணி 2 ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் எதுவும் ஓடவில்லை. இப்போது ராஜ பீமா, சம்பவம், பூமர் அங்கிள் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

oviya

ஒருபக்கம், அவ்வப்போது தனது அழகான புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டு தனது ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்தவகையில், ஓணம் பண்டிகையை கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸ்களை குவித்து வருகிறார்.

இதையும் படிங்க: உன்ன பாத்தவுடனே ஃபிளாட் ஆயிட்டோம்!.. க்யூட் லுக்கில் காலி செய்யும் அமலாபால்!…

oviya