ஐ யம் பேக்!...இது எப்படி இருக்கு!...ஒல்லி பெல்லி உடம்பை காட்டும் ஓவியா....
களவாணி படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் ஓவியா. தொடர்ந்து சில படங்களில் நடித்தார். ஆனாலும் சொல்லிகொள்ளும்படி ஒரு ஹிட்டும் அவருக்கு கிடைக்கவில்லை. மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக அவர் நடித்த கலகலப்பு படம் மட்டும் ஹிட் படமாக அமைந்தது.
பிக்பாஸ் தமிழ் முதல் சீசன் அவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுத்தந்தது. மனதில் பட்டதை யாருக்கும் பயப்படாமல் தைரியமாக பேசும் குணமும், அவரின் குழந்தைத் தனமும் ரசிகர்களை மிகவும் பிடித்து போனது. எனவே, சமூக வலைத்தளங்களில் ஓவியா ஆர்மியும் உருவானது. ஆனால், யாரும் எதிர்பார்த்திராதபடி அந்நிகழ்ச்சியிலிருந்து ஓவியா வெளியேறினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்த பெயரை ஓவியா பயன்படுத்திக் கொண்டு தமிழ் திரையுலகில் வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரோ 90 ml போன்ற கிளுகிளுப்பு திரைப்படத்தில் நடித்து பெயரை கொடுத்துக்கொண்டார். அந்த படமும் ஓடவே இல்லை.
அதன்பின் அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. அவ்வப்போது டிவிட்டரில் தன்னுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். மேலும், இன்ஸ்டாகிராமில் தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். மேலும், உடல் எடையையும் குறைத்து ஒல்லியாக மாறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
இந்நிலையில், புடவை கட்டி இடுப்பை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறார்.