சில்க் ஸ்மிதாவையே மிஞ்சிய பத்மினி! இப்படியெல்லாம் நடிச்சிருந்தாங்களா? முகத்திரையை கிழித்த பிரபலம்
பழம்பெரும் நடிகை நாட்டிய பேரொளி பத்மினி. தமிழ் சினிமாவில் மிகவும் கோலோச்சிய நடிகையாக திகழ்ந்தார். திருவிதாங்கூர் சகோதரிகளாக பத்மினி, ராகினி, லலிதா ஆகிய மூவருமே மிகவும் பிரபலமாக திகழ்ந்து வந்தனர். இதில் பத்மினி நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும் அவருடைய சகோதரிகளான லலிதா மற்றும் ராகினி ஒரு சில படங்களில் நடித்திருக்கின்றனர்.
சிவாஜி, எம்ஜிஆர், ஜெமினி கணேசன் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்த பத்மினி சிவாஜியுடன் சேர்ந்து மட்டும் 50க்கும் மேற்பட்ட படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார். ஒரு சமயத்தில் சிவாஜியையும் பத்மினியையும் இணைத்து பல கிசு கிசுக்கள் வந்து கொண்டே இருந்தன.
இதையும் படிங்க : இந்த அழகுதேவதைகள் பெற்றெடுத்த மகள்களா இது? ஹீரோயின்களையே மிஞ்சும் நடிகைகளின் வாரிசுகள்
கவர்ச்சியே காட்டாமல் நடித்த பத்மினி தமிழ் மட்டுமில்லாமல் மற்ற மொழி படங்களிலும் நடித்து சாதனை படைத்திருக்கிறார். அந்தக் காலத்தில் மிகவும் அழகான நடிகையாக திகழ்ந்து வந்தார் பத்மினி. இந்த நிலையில் பத்மினியை பற்றி பிரபல அரசியல் விமர்சகர் ஆன காந்தராஜ் ஒரு பேட்டியில் கூறினார்.
அதாவது காந்தராஜ் காலத்தில் இருந்த ஒரு சில பேரிடம் கேட்டால் பத்மினியை பற்றி அந்த மாதிரி விஷயங்களை எல்லாம் சொல்லுவார்கள் என்றும் மேலும் அவர் ஆரம்ப காலங்களில் சில்க் ஸ்மிதாவையே மிஞ்சும் அளவிற்கு கவர்ச்சியை காட்டி வந்தார் என்றும் வெறும் ஜட்டியுடன் நடித்திருக்கிறார் என்றும் காந்தராஜ் கூறினார்.
அதன் பிறகு பத்மினியை பார்த்தவர்கள் இப்படி ஒரு குடும்ப பாங்கான முகத்தை பார்த்ததே இல்லை என்ற சொல்லும் போது இது ஏதோ பரவாயில்லை என்றுதான் எங்களை மாதிரியான ஆட்களுக்கு தோன்றும் என கூறியிருக்கிறார்.
மேலும் ஹிந்தியில் பத்மினி நடித்த ‘ஜிஸ்தேஷ் மெயின் கங்கா பேஹ்டி ஹாய்’ என்ற படம் மிகவும் பிரபலமான திரைப்படம். அந்தப் படத்தில் பத்மினி காட்டிய கவர்ச்சி அதுவரைக்கும் வேறு எந்த படத்திலும் அவர் காட்டியதே இல்லையாம். அதை பார்த்த தமிழ் ரசிகர்கள் அட நம்ம பத்மினியா இது என வாய் அடைத்துப் போனார்களாம். மேலும் அப்போது உள்ள பத்திரிகைகளும் அந்தப் படத்தில் இருந்து சில பத்மினியின் காட்சிகளை வெளியிட்டு பல விமர்சனங்களை முன் வைத்தார்களாம்.
இந்த ஹிந்தி படத்திற்கு முன்பு வரை அவர் நடித்த படங்களில் பெரும்பாலும் சேலை, டைட்டான சுடிதார் போன்ற உடைகளையே மட்டும் அணிந்திருப்பார். ஜீன்ஸ் பேண்ட் போன்ற உடைகள் கூட கிடையாது. ஆனால் அந்த ஹிந்தி படத்தில் நரிக்குறவர் போல உடை அணிந்ததோடு மட்டுமில்லாமல் பின்னழகை முழுவதுமாக காட்டியவாரும் வயிறு, இடுப்பு போன்றவைகள் தெரியும் மாதிரியும் உடை அணிந்து நடித்திருப்பாராம். அதனால் தமிழ் ரசிகர்கள் பத்மினியை மிகவும் விமர்சித்தார்களாம்.