ஐயம் சாரி.. நான் ரொம்ப பிஸி!.. எம்.ஜி.ஆருடன் நடிக்க மறுத்த பத்மினி!.. காரணம் இதுதானாம்!
தமிழ் சினிமாவில் நாட்டிய பேரொளி என அழைக்கப்பட்டவர் பத்மினி. இவர் கேரளாவை சேர்ந்தவர். 1940களில் லலிதா, ராகிணி, பத்மினி ஆகிய 3 சகோதரிகளும் பிரபலமாக இருந்தனர். இவர்கள் எல்லாருமே சினிமாவில் நடித்தாலும் பத்மினி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். பரதநாட்டியத்தில் பத்மினியை மிஞ்ச ஆள் இல்லை என எல்லோரும் பேசிய காலம் அது. சிறந்த நடிகையாகவும் விளங்கினார்.
நடிகர் திலகம் சிவாஜி பல நடிகைகளுடன் ஜோடி போட்டு நடித்தாலும் பத்மினிதான் அவருக்கு மிகவும் பொருத்தமான ஜோடியாக இருந்தார். பல விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். திருமணமாகி அமெரிக்காவில் செட்டில் ஆனார். திருமணத்திற்கு பின்னரும் சிவாஜியுடன் பல படங்களில் நடித்தார். அதில் தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் தமிழ் சினிமாவில் இப்போதும் ஒரு கிளாசிக் படமாக இருக்கிறது.
இதையும் படிங்க: சிவாஜியை கலாய்த்து பாடல் எழுதிய வாலி!.. கோபத்தின் உச்சிக்கே போன எம்.ஜி.ஆர்..
1956ம் வருடம் எம்.ஜி.ஆர், பானுமதி நடித்து வெளியான திரைப்படம் தாய்க்குபின் தாரம். இந்த திரைப்படத்தை எம்.ஏ. திருமுகம் என்பவர் இயக்கியிருந்தார். இந்த படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடிக்க பத்மினியைத்தான் படக்குழு அணுகியது. ஆனால், அப்போது அவர் பல திரைப்படங்களில் நடித்து கொண்டிருந்தார்.
அந்த படங்களின் படப்பிடிப்பு அனைத்தும் சென்னையில் உள்ள ஸ்டுடியோக்களில் நடைபெற்று வந்தது. ஆனால், தாய்க்குபின் தாரம் படத்தின் படப்பிடிப்பு கோவையில் நடந்தது. எனவே, கோவையிலேயே தங்கி நடிக்க வேண்டியிருந்ததால் அப்படத்தில் நடிக்க பத்மினி மறுத்துவிட்டார். அதன்பின் அப்படத்திற்காக பானுமதி ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
அதேநேரம், எம்.ஜி.ஆருடன் பத்மினி மன்னாதி மன்னன், ராணி சம்யுக்தா, ராஜா தேசிங்கு, விக்ரமாதித்தன் உள்ளிட்ட சில படங்களில் மட்டும் நடித்திருந்தார். அதன்பின் பத்மினியுடன் எம்.ஜி.ஆர் நடிக்கவே இல்லை. சரோஜாதேவி, ஜெயலலிதா ஆகியோருடன் மட்டுமே எம்.ஜி.ஆர் அதிக படங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உயிரே போனாலும் அதை மட்டும் செய்ய மாட்டேன்!.. படப்பிடிப்பில் தகராறு.. ஜெ.வை காப்பாற்றிய எம்.ஜி.ஆர்…