50,60களில் நன்றாக நடனமாட தெரிந்த நடிகைகள்தான் சினிமாவில் கோலோச்சினார்கள். அதில் பத்மினி முக்கியமானவர். சிறுவயது முதலே பரதநாட்டியத்தை முறையாக பயின்றவர் இவர். பரதநாட்டியத்தில் கை தேர்ந்தவர். அதனால்தான் இவருக்கு நாட்டிய போரொளி என்கிற பட்டமும் கிடைத்தது. இவர் நடித்த பல படங்களில் இவர் பரத நாட்டியம் ஆடுவது போல் காட்சிகள் இருக்கும்.
சிவாஜியுடன் இவர் நடித்து வெளியான ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தை யாராலும் மறக்கவே முடியாது. இந்த படத்தில் அவ்வளவு சிறப்பாக நடனமாடியிருப்பார். இவருக்கு போட்டியாக வைஜெயந்தி மாலாவும் ஒருபக்கம் நடனத்தில் சிறந்து விளங்கினார். சினிமாவிலும் சரி, வெளியுலகிலும் சரி இவர்கள் இருவருக்கும்தான் போட்டியே இருந்தது.
இதையும் படிங்க: சொன்னது ஒண்ணு..செய்றது ஒண்ணு..எம்.எஸ்.வி மீது கடுப்பான கண்ணதாசன்..இப்படியா பழிவாங்குவாரு!..
ஆனால், மார்க்கெட்டின் பீக்கில் இருக்கும்போது மருத்துவர் ஒருவரை 1961ம் வருடம் திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டிலானார் பத்மினி. அவர் இல்லாத நேரத்தில் வேறு ஒரு நடிகை சினிமாவில் முதலிடத்தை பிடித்தார். அதனால் தலைக்கணம் ஏறிய அவர் இயக்குனர்களையும், தயாரிப்பாளர்களையும் மதிக்காமல் நடந்ததாக சொல்லப்படுகிறது.
இதுபற்றி அவ்வப்போது சென்னை வரும் பத்மினியிடம் சிலர் சொல்வார்களாம். நீங்கள் இல்லாததால் அந்த நடிகை இப்படி ஆட்டம் போடுகிறார். நீங்கள் மறுபடியும் சினிமாவில் நடிக்க வேண்டும் என கோரிக்கை வைக்க கணவரை சம்மதிக்க வைத்து 1963ம் வருடம் மீண்டும் சினிமாவில் நடிக்க வந்தார் பத்மினி.
மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்த ‘காட்டு ரோஜா’ படத்தில் நடித்தார். இந்த படத்தில் ஒரு பாடல் காட்சி வரும். இதை கவிஞர் கண்ணதாசனிடம் விவரித்த இயக்குனர் சுப்பாராவ் ‘சில வருடங்கள் கழித்து சினிமாவுக்கு வந்துள்ள பத்மினியை வரவேற்பது போலவும், அந்த நடிகையை பத்மினி சீண்டுவது போலவும் வரிகள் வேண்டும்’ என சொல்ல புரிந்துகொண்ட கண்ணதாசன் அதற்கு ஏற்றார் போல் பாடல் எழுதினார்.
இதையும் படிங்க: கோபத்தில் பிரிந்த கண்ணதாசன் – சிவாஜி.. பிரிந்த இரு துருவங்களையும் சேர்த்த அந்த அழகான பாடல்…
‘ஏனடி ரோஜா என்னடி சிரிப்பு எதனைக் கண்டாயோ.. அன்று போனவள் இன்று வந்து விட்டாள் என்று புன்னகை செய்தாயோ’ என பல்லவி எழுதினார்.. பத்மினியின் அழகை வர்ணிக்கும்படி ‘மொட்டாக நின்றவளே.. முள்ளோடு வந்தவளே.. முத்து நகைகளை கொட்டி அளந்திடும் முகத்தைக் கொண்டவளே…கண்கள் மயங்கிட கன்னம் சிவந்திட தளுத்து நின்றவளே.. என சரணம் எழுதினார்.
அடுத்த சரணத்தில் ‘இரத்தின கம்பளமே அடி முத்திரை மோதிரமே நீ நாளைப் பொழுதுக்குள் வாடி விழுந்திடும் மாயக் கதையடியோ.. நான் சித்திர பெண்மையடி இது தெய்வ பருவமடி.. எத்தனை காலங்கள் மாறிய போதிலும் என்றும் இளமையடி எனக்கு..’ என அந்த நடிகையை பார்த்து பத்மினி பாடுவது போல சரணம் எழுதியிருந்தார்.
பத்மினி சென்ற பின் மார்க்கெட்டை பிடித்த அந்த நடிகையும், கண்ணதாசன் பாடலில் மூலம் சொன்ன அந்த நடிகையும் நடிகை சரோஜாதேவிதான் என அப்போது எல்லோரும் பேசிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நாள் முழுக்க தூங்கி கொண்டே இருந்த கண்ணதாசன்!. கடுப்பில் கத்திய எம்.எஸ்.வி.. வந்ததோ சூப்பர் பாட்டு!..
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…