More
Categories: Cinema History Cinema News latest news

முதல் படத்திலேயே முத்திரை பதித்த நடிகை!..மூன்று தீபாவளிகளை கடந்தும் வெற்றிகரமாக ஓடிய படம்!..

தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர், நடிகைகள் தோன்றி மறைந்தாலும் அவர்களின் புகழ் என்றைக்கும் மாறாமல் காலங்காலமாக நின்னு பேசும். அவர்கள் செய்த சாதனைகள் என்றும் அழியாமல் வரலாற்றில் எழுதி வைக்கப்பட்டிருக்கும். அந்த வகையில் மிகவும் பெருமைக்குரிய நடிகையாக கருதப்படுபவர் நடிகை பண்டரிபாய்.

pandari1

சினிமாவிற்கு செல்ல அனுமதிக்காத பெற்றோர்கள் மத்தியில் விதியின் விளைவாக சினிமாவில் நுழைந்தவர் தான் பண்டரிபாய். நாடக மேடைகளில் ஏறிய பண்டரிபாய் அதன் மூலம் கிடைத்த உச்சம் தான் வெள்ளித்திரைக்கு நகர்த்திக் கொண்டு வந்து சேர்த்தது.

Advertising
Advertising

முதன் முதலில் அறிமுகமானது கன்னட சினிமா உலகில் தான். ஆனால் கன்னடாவில் நடித்த முதல் படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. தமிழ் , தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்த பண்டரிபாய் கிட்டத்தட்ட 1000 படங்களில் நடித்து சாதனை படைத்திருக்கிறார்.

pandari2

தமிழில் சிவாஜி அறிமுகமான பராசக்தி படத்தில் சிவாஜிக்கு ஜோடியாகவும் கன்னட உலகில் ராஜ்குமார் அறிமுகமான முதல் படத்தில் ராஜ்குமாருக்கும் ஜோடியாகவும் நடித்தவர் தான் பண்டரிபாய். கன்னட உலகில் முதல் படம் தோல்வியை தழுவினாலும் தமிழில் ஹரிதாஸ் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் பண்டரிபாய்.

அந்தப் படத்தில் தியாகராஜ பாகவதர் லீடு ரோலில் நடிக்க பண்டரிபாய் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்தப் படம் 100 வாரங்களை கடந்தும் வெற்றிகரமாக ஓடிய திரைப்படம். 1944 ஆம் ஆண்டு தீபாவளி அன்று வெளியான ஹரிதாஸ் திரைப்படம் மூன்று தீபாவளிகளை கடந்தும் வெற்றிகரமாக ஒடியிருக்கிறது.

bhagavathar

இந்த வெற்றியை தொடர்ந்து பண்டரிபாய் தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத நடிகையாக திகழ்ந்தார். எம்ஜிஆர், சிவாஜி போன்றோர்களுக்கு நாயகியாக நடித்த பண்டரிபாய் ஒரு கட்டத்தில் அம்மாவாகவும் நடித்தார். தமிழ் சினிமாவிலேயே இப்பொழுது வரை பண்டரிபாய் தோன்றிய அம்மா கதாபாத்திரம் மாதிரி யாரும் இதுவரை நடிக்க வில்லை என்பது தான் உண்மை. அவரின் புகழும் நடிப்பும் காலந்தோறும் நின்று பேசும் என்பதில் சந்தேகமில்லை.

இதையும் படிங்க : ‘லியோ’ சூட்டிங்கில் இப்படி ஒரு பிரச்சினையா?.. மூட்டையை கட்டிட்டு வரவேண்டியது தான்!..

Published by
Rohini

Recent Posts