நானும் பாதிக்கப்பட்டு இருக்கேன்!.. நயன்தாராவுக்கு கொடுத்த ஆதரவு?!.. பார்வதி சொன்ன பதில்!…

Published on: November 24, 2024
nayanthara
---Advertisement---

நடிகை பார்வதி நயன்தாராவுக்கு ஆதரவு கொடுத்தது ஏன் என்பது தொடர்பாக விளக்கம் அளித்து இருக்கின்றார்.

தமிழ் சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் தனுஷ் குறித்து மூன்று பக்க அளவிற்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டு மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். நடிகர் தனுஷ் போலியான முகமூடியை போட்டுக்கொண்டு ஊரை ஏமாற்றி வருகின்றார்.

ஓம் நமச்சிவாயா என்று கூறிக்கொண்டு வெளிவேஷம் போட்டு வருகிறார் என பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு இருந்தார். இப்படி நடிகை நயன்தாரா அறிக்கை வெளியிட்டதற்கு காரணம் கடந்த நவம்பர் 18ஆம் தேதி வெளியான நயன்தாராவின் டாக்குமென்டரி படத்தில் நானும் ரவுடிதான் திரைப்படத்திலிருந்து வெறும் 3 வினாடி காட்சிகளை பயன்படுத்தியதற்காக நடிகர் தனுஷ் 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு இருக்கின்றார்.

இதையும் படிங்க: போற போக்குல இப்படி கலாய்ச்சிடீங்களே பாய்!… சல்மான்கான் சொன்னது யாரென்னு தெரியுதா?!…

இதனால் கோபமடைந்த நயன்தாரா பொங்கி எழுந்து மூன்று பக்கத்திற்கு அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த அறிக்கை வெளியானது முதலே பலரும் நயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்து இருந்தார்கள். அதிலும் நடிகர் தனுசுடன் நடித்த பல நடிகைகள் இந்த அறிக்கைக்கு ஆதரவு கொடுத்திருந்தது மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. அதில் பலரும் மலையாள நடிகைகள் தான்.

nayanthara
nayanthara

இதில் மற்றொரு அதிர்ச்சி என்னவென்றால் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக மரியான் திரைப்படத்தில் நடித்திருந்த பார்வதி, வடசென்னை படத்தில் நடித்திருந்த ஐஸ்வர்யா ராஜேஷ், நையாண்டி படத்தில் நடித்திருந்த நஸ்ரியா, கொடி படத்தில் நடித்திருந்த அனுபாமா, 3 திரைப்படத்தில் நடித்த சுருதிஹாசன் உள்ளிட்டோர் இந்த பதிவுக்கு ஆதரவு தெரிவித்து இருந்தார்கள்.

இந்நிலையில் நயன்தாராவின் பதிவுக்கு ஆதரவு தெரிவித்தது குறித்து நடிகை பார்வதி சமீபத்தில் பேசியிருந்தார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது ‘நடிகை நயன்தாரா தற்போது லேடிஸ் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார் என்றால் தனக்கான இடத்தை அவர் பெரும் போராட்டம் நடத்தி தான் உருவாக்கி இருப்பார். அவர் ஒரு விஷயத்தை சொல்கின்றார் என்றால் அதில் நிச்சயம் உண்மை இருக்கும் என்பதை உணர்ந்தேன்.

இதையும் படிங்க: சினிமாக்கு டாட்டா காட்டும் ஐடியாவில் அஜித்.. பரபரப்பாகும் டிசம்பர் மாதம்.. ஏங்க இப்படி?

எனக்கு இப்படி ஒரு நிலை வரும்போது யாருமே ஆதரவு தெரிவிக்கவில்லை. சப்போர்ட் செய்வதற்கு யாருமே இல்லாமல் தனியாக நின்றேன். அந்த நிலை நயன்தாராவுக்கு வரக்கூடாது என்பதற்காகத்தான் ஆதரவு தெரிவித்தேன். நயன்தாராவுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்றாலும் குரல் கொடுப்பேன்’ என பார்வதி அந்த பேட்டியில் பேசியிருந்தார்.

ramya suresh

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.