முகமூடி முதல் பீஸ்ட் வரை பூஜா ஹெக்டேயின் அப்டேட்ஸ்
மும்பை வரவு தான் என்றாலும் தமிழ்சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்துவதில் வல்லவர் தான் பீஸ்ட் படநாயகி பூஜா ஹெக்டே.
அழகான முகத்தோற்றம். சரியான உயரம். எடுப்பான உடற்கட்டு, மொத்தத்தில் வசீகரிக்கும் அழகு என எதிலுமே சோபிக்காதவர் சிரிப்பில் நம்மை சொக்க வைத்து விடுவார் என்பது நிச்சயம்.
முகமூடிக்கு அப்புறம் ஏன் இவ்ளோ நாளா இவங்க எங்க போனாங்கன்னு நம்மை கட்டாயமாகக் கேட்க வைக்கிறது. அதற்கு அவர்கள் ஒருபுறம் உழைத்தாலும் அதிர்ஷ்டமும் கைகொடுக்க வேண்டும் அல்லவா...இனி... தொடரலாம்...பூஜா ஹெக்டே என்னும் மந்திர அழகியை...!
2012ல் தமிழில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானார். இடையில் காணாமல் போய் விட்டார். பத்து ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இன்று டாப் லெவலில் வந்து படங்களை குவித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடித்த படங்களுக்கு கடும் கிராக்கி. ராதே ஷ்யாம் படம் சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து தற்போது இவர் நடிப்பில் சக்கை போடு போட்டுக் கொண்டு வரும் படம் எது என்றால் இளையதளபதி விஜயின் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட். இதில் இளைஞர்களைக் கவரும் வகையில் இளையதளபதிக்கு சமமாக ஆட்டம் போட்டு இருக்கிறார் பூஜா ஹெக்டே.
தெலுங்கு, இந்தி, தமிழ் என ஒரு ரவுண்டு கட்டி ஆடும் இந்த அழகி திரையுலகில் காலடி எடுத்து வைத்தது என்னவோ தமிழ் தான். இருந்தாலும் தற்போது அனைத்து மொழிகளிலும் பின்னி பெடலெடுத்து வருகிறார்.
இனி பூமிக்கு வந்த தேவதை பூஜா ஹெக்டே என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.
ஆரம்பத்தில் சினிமாவில் நுழையும்போது தோல்வியை சந்தித்தாலும் தற்போது கிடைத்திருக்கும் வெற்றிக்கு கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். தற்போது எல்லா முன்னணி ஹீரோக்களுமே பூஜா ஹெக்டேவைத் தான் தேர்வு செய்கின்றனர்.
இதற்கு முன்பு ஸ்ரீதேவிக்குத் தான் இந்த சான்ஸ் கிடைத்தது. நான் தெலுங்கில் நடித்தால் அங்குள்ள மக்கள் மகிழ்ச்சியாக ரசிக்கின்றனர். தமிழிலும் இப்போது இதே ஆச்சரியம் நடக்கிறது. இந்தி என்னை வேகமாக வளர்த்து விட்ட உலகம். நம்மை நம்பி பார்க்க வரும் ரசிகர்களை நாம் ஏமாற்றக்கூடாது. அவர்களுக்குத் திருப்தி கிடைக்கும் வகையில் நடித்து விட வேண்டும்.
ஹிருத்திக் ரோஷன், அல்லு அர்ஜூன், தாரா, தளபதி விஜய் ஆகியோருடன் டான்ஸ் ஆடுவது எனக்கு சவாலாக இருந்தது. மொஹஞ்சதாரோ படத்தில் ஹிருத்திக் ரோஷனுடன் சேர்ந்து ஆடும்போது ஒரு ஆன்மீக உணர்வைப் பெற முடிந்தது.
இலகுவான டான்ஸ் ஸ்டெப்கள் என்னை வேறு உலகத்திற்கு அழைத்துச் சென்றன. அதே போல தளபதி விஜய் உடனான அரபிக்குத்து பாடலை மறக்கவே முடியாது. அந்த வகையில் நான் அதிர்ஷ்டமானவள் தான்.
அரபிக்குத்து அனுபவம்
நல்லா எனர்ஜியான வேடிக்கையான அனுபவம். நான் ரொம்பவே வியர்த்து விட்டேன். ஆனால் தளபதி விஜய் கூலாகவும், சில்லாகவும் இருந்தார்.
பிரபாஸ் உடனான ராதே ஷியாம் அனுபவம் பற்றி குறிப்பிடுகையில் 4 ஆண்டுகளாக இந்தப்படப்பிடிப்பு நடந்தது. அழகான காதல் கதை. நல்ல அனுபவம் கிடைத்தது. கொரோனா தொற்றுநோய் காலகட்டத்தில் படப்பிடிப்பு முடிய காலதாமதமானது. ரொம்பவும் சேலஞ்சான நடிப்பு இந்தப்படத்தில் எனக்கு கிடைத்தது. முகமூடி படத்தில் நடித்த அனுபவம் அற்புதமானது.
பீஸ்ட் ரிலீஸ்க்காக தமிழ் ரசிகர்கள் தவம் கிடக்கின்றனர். இந்தப்படத்தின் படப்பிடிப்பில் நிறைய வேடிக்கையான அனுபவங்கள் கிடைத்தது. இந்தப்படத்தைப் பற்றி தற்போதைக்கு இவ்வளவு தான் சொல்ல முடியும். அடுத்த மாதம் பீஸ்ட் பட புரோமோஷனுக்காக சென்னை வருவேன். இப்பவே எல்லாவற்றையும் சொல்லிவிட்டால் வரும்போது சொல்வதற்கு ஒன்றும் இருக்காது.