கார்த்திக் செஞ்ச காரியத்தால் அமெரிக்கா பறந்த நடிகை!..திரும்ப எப்படி வந்தார் தெரியுமா?....
1999 ஆம் ஆண்டில் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த படம் சின்ன ராஜா திரைப்படம், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை இயக்கியவர் சித்ரா லட்சுமணன். இந்த படத்தில் நடிகர் கார்த்திக், பிரியா ராமன், மணிவண்ணன், , ரோஜா உட்பட பலரும் நடித்திருந்தனர்.
முதலில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஆரம்பிக்கும் போது நடிகர், நடிகைகளை தேர்வு செய்யும் பணியில் இருந்த போது கார்த்திக்கிற்கு ஜோடியாக புதுமுக நடிகையை போட்டால் நன்றாக இருக்கும் என கருதிய இயக்குனர் தேடும் படலத்தை தொடங்கியிருக்கிறார்.
அதற்காக அமிதாப் பச்சன் ஒப்புதலில் இருந்த ஒரு ஹிந்தி நடிகையை கமிட் செய்து சென்னை வரவழைத்திருக்கின்றனர். அப்போது திடீரென கார்த்திக் சிறிது காலம் கழித்து படத்தை தொடங்கலாம் என ஆலோசனை கூற படப்பிடிப்பு இழுத்துக் கொண்டே போனதாம். இதனால் கடுப்பான மும்பை நடிகை படப்பிடிப்பில் இருந்து விலகுவதாக அறிவித்து அமெரிக்கா போய் செட்டிலாகி விட்டாராம்.
அதன் பிறகு தான் செல்வமணியிடம் கூறி ரோஜாவை புக் செய்துள்ளார் சித்ரா லட்சுமணன். அமெரிக்கா பறந்த நடிகை யார் தெரியுமா? விஸ்வரூபம்1, 2, உத்தம வில்லன் போன்ற படங்களில் கமலுக்கு ஜோடியாக நடித்த பூஜா குமார் தான் சின்ன ராஜா படத்தில் கார்த்திக்கிற்கு ஜோடியாக கமிட் செய்யப்பட்ட நடிகை. இல்லையென்றால் அப்பவே தமிழில் அறிமுகமாகி தமிழ் சினிமாவிலும் ஒரு ரவுண்ட் அடித்திருப்பார்.