தெலுங்கு இயக்குனரால் பாலியல் தொல்லைக்கு ஆளானாரா தமிழ் நடிகை? யார் தெரியுமா?
Poonam: மலையாள சினிமாவை தொடர்ந்து இப்போது தெலுங்கு சினிமாவிலும் பாலியல் தொடர்பான பிரச்சினைகள் பெரும் பூகம்பத்தை கிளப்பி வருகின்றன. டான்ஸ் மாஸ்டர் ஜானி மீது இளம் பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் ஜானி மாஸ்டர் மீது போக்ஷோ வழக்கு பாய்ந்து அவரை இப்போது போலீஸார் கைது செய்திருக்கின்றனர்.
ஜானி மாஸ்டர் மீது அந்த பெண் புகார் கொடுத்ததில் இருந்து ஜானி மாஸ்டர் தலைமறைவாக இருந்தார், இப்போதுதான் போக்ஷோ வழக்கில் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். சமூகத்தில் ஒரு நல்ல அந்தஸ்தில் இருக்கும் ஒருவர் இப்படிப்பட்ட புகாரில் சிக்கியிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க:மீண்டும் வெற்றிபாதையில் ஹரிஷ் கல்யாண்… லப்பர் பந்து திரைவிமர்சனம்…
தெலுங்கில் கொடி கட்டி பறந்தாலும் தமிழ் ரசிகர்களின் அன்பையும் பெற்றார் ஜானி மாஸ்டர். அதற்கு காரணம் விஜய். ஏனெனில் விஜயின் சூப்பட் ஹிட் பாடலில் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்ட பாடலான ரஞ்சிதமே மற்றும் ஹபி ஹபி போ போன்ற பாடலுக்கு டான்ஸ் மாஸ்டர் ஜானிதான்.
இதனாலையே தமிழ் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றார். இந்த நிலையில் தெலுங்கில் ஒரு முக்கிய பிரபலம் மீதும் இது மாதிரியான புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. தமிழில் நெஞ்சிருக்கும் வரை படத்தின் நாயகி பூனம் கௌர் குண்டூர்காரன் பட இயக்குனர் த்ரீ விக்ரம் மீது காரசாரமான புகாரை கொடுத்து வருகிறார்.
இதையும் படிங்க: கங்குவா பட தேதியை அறிவித்த படக்குழு! சொன்னதை செஞ்சிட்டாரு சூர்யா
தமிழில் பயணம், வெடி, நாயகி போன்ற படங்களிலும் பூனம் கௌர் நடித்துள்ளார். இவர் பொதுவாகவே சமுதாயத்தில் நடக்கும் பிரச்சினைகளை சமூக வலைதளங்களில் அவ்வப்போது தட்டி கேட்டு வருகிறார். இந்த நிலையில் ஜானி மாஸ்டர் பிரச்சினையில் குண்டூர்க்காரன் பட இயக்குனரையும் குறிப்பிட்டு பேசியிருக்கிறார் பூனம் கௌர். த்ரீ விக்ரம் மீது பல வகைகளில் குற்றச்சாட்டுக்களை கூறியிருக்கிறார் பூனம்.
இவர் மீது தெலுங்கு நடிகர் சங்கம் நடவடிக்கை எடுத்திருந்தால் அரசியல் ரீதியான அழுத்தத்திற்கு நான் ஆளாகியிருக்க மாட்டேன். தெலுங்கு சினிமாவில் இருக்கும் பல முக்கிய தலைகள் த்ரீ விக்ரமை கேள்வி கேட்க வேண்டும் என்று பூனம் கௌர் கூறியிருக்கிறார். த்ரீ விக்ரமுக்கும் பூனம் கௌருக்கு என்னதான் பிரச்சினை என்று வெளிப்ப்டையாக தெரிவிக்காவிட்டாலும் என்னமோ நடந்திருக்கிறது என தெளிவாக தெரிகிறது.
இதையும் படிங்க: மீனா மீது பாசமாக பேசிய விஜயா… பதட்டத்தில் செழியன்… புலம்பிய கோமதி…