அது ரொம்ப தூக்கலா இருக்கு!.... ரசிகர்களை சூடேத்திய பிரபல நடிகை...
சீரியல் இயக்குனர் திருமுருகன் இயக்கிய ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு’ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் அறிமுகமானவர் பூர்ணா. இவரின் உண்மையான பெயர் சம்னா காஷிம். தாவணி பாவாடையில் அழகாக இருந்ததால் குடும்ப பாங்கான நடிகையாக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, அவரின் மார்க்கெட் சரிந்து போனது.
கந்தகோட்டை, துரோகி, ஆடு புலி, இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு, வித்தகன், கொடி வீரன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ள பூர்ணா தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் கிடைப்பதை வைத்து பணம் சம்பாதித்து வருகிறார். டிவி நிகழ்ச்சிகளும் நடுவராக இருந்து வருகிறார்.
தமிழில் வாய்ப்பு இல்லாத காரணத்தால் தெலுங்கில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
அதோடு, சமீபகாலமாக சற்று தூக்கலான கவர்ச்சியில் புகைப்படங்களை பகிர துவங்கியுள்ளார். அப்படி அவர் பகிர்ந்த சில புகைப்படங்கள் இங்கே பகிரப்பட்டுள்ளது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘உங்க அழகு தூக்கலா இருக்கு’ என பதிவிட்டு வருகின்றனர்.