பள்ளிப்பருவத்தில் புத்தகத்தின் இடையில் மறைத்து வைத்து ரசித்த அந்த நடிகையின்மனம் கவர்ந்த கதாநாயகன் இவரா..?!
சொக்க வைக்கும் பேரழகு கொண்டவள். தமிழ்த்திரையுலகின் பொக்கிஷம். இளைஞர்களின் கனவுலக ராணி...தேன் சிந்தும் இதழ்கள், காந்தம் போல் கவர்ந்திழுக்கும் கண்களைக் கொண்டவர். இன்னும் சொல்லப்போனால் இவர் 70ஸ், 80ஸ்களில் உள்ள டீன் ஏஜ் இளைஞர்களின் தூக்கத்தைக் கெடுத்தவர். யாரென்றால் அது சொல்லத் தேவையே இல்லை. அவர் தான் நடிகை பிரமிளா.
தமிழ்த்திரையுலகில் கதாநாயகி, குணச்சித்திர நடிகை, வில்லி என பன்முகத்திறன் கொண்டவர். இளமைப்பொலிவும், துள்ளலான துறுதுறுப்பும், குறும்புத்தனமும் வசீகர சிரிப்பும் கொண்டவர். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பன்மொழிப்படங்களில் நடித்தார். அரங்கேற்றத்தின் மூலம் நடிப்பில் முத்திரை பதித்தவர்.
நாடகம், நாட்டியம், கலைத்துறையில் புகழ் பெற்றவர். மாமியாரின் சொந்த நாடு அமெரிக்கா. தற்போது இங்கு தான் வாழ்ந்து வருகிறார். தான் பிறந்த தாய்நாட்டையும், ரசிகர்களையும் என்றளவும் எண்ணி வருபவர்.
1956ம் ஆண்டு திருச்சி மாவட்டத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவ தம்பதியரான அமல்தாஸ்-சுசீலாவுக்கு மகளாகப் பிறந்தார்.
இவருடன் அண்ணன் சீசர், தங்கை சுவீட்டி, தம்பி பிரபு ஆகியோர் பிறந்தனர். இவரது தாத்தா சபரிராஜ் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர். ரெயில்வேத் துறையில் மருத்துவர். நடிகர் சிவாஜிகணேசன், சாவித்திரி ஆகியோரின் மருத்துவ நண்பர் இவர்.
பிரமிளாவின் தந்தை படிப்பை முடித்து போபால் போன்ற நகரங்களில் பணிபுரிந்தார். பள்ளிப்பருவத்தில் தனது மனம் கவர்ந்த கதாநாயகரான நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் படத்தை புத்தகத்திற்கு இடையில் மறைத்து வைத்துப் பார்த்து ரசித்தார். பாட்டு, நடனம் ஆகியவற்றின் மேல் கலைஆர்வம் கொண்டு பிரமிளா சிறந்து விளங்கினார். காசநோய்க்கான மருந்தை பிரமிளாவின் தந்தை கண்டறிந்தார்.
பள்ளிப்பருவத்திலேயே பிரமீளா நடிகர் திலகத்தின் தீவிர ரசிகை. சினிமாவில் தனக்குப் பிடித்த நட்சத்திரங்களைக் காண சென்னை செல்ல அடம்பிடித்தார். ஆனாலும் அவருக்கு மனம் கவர்ந்த நாயகர் சிவாஜியைக் காண முடியவில்லை.
பிரளமிளாவை சினிமாவில் நடிக்க சம்மதித்தார் அவரது தந்தை. 13வது வயதில் நாயகியாக பிரமிளா திரைத்துறையில் கால் பதித்தார். 1972ல் வாழையடி வாழை படத்தில் சினிமாவில் இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அறிமுகப்படுத்தினார்.
இப்படத்தில் முத்துராமனின் மனைவியாக நடித்தார் பிரமிளா. தாய்மார்கள் மத்தியில் பேராதரவைப் பெற்றார். அப்போது இவரது வயது 14. அவரது அசாத்தியமான நடிப்பு திரையுலகத்தினரை ஆச்சரியப்பட வைத்தது.
இவரது தோற்றப்பொலிவு, நடிப்பையும் கண்டு வியந்த கே.பாலசந்தர் தனது அரங்கேற்றம் படத்திற்கான நாயகி கிடைத்து விட்டார் என்று மகிழ்ந்தார். பாலியல் தொழிலாளி வேடம் என்றதும் பிரமிளாவின் தந்தை இதற்கு மறுத்தார். பின்பு கதையின் முக்கியத்துவத்தைக் கேட்டதும் தனது மகள் நடிக்க ஒப்புக்கொண்டார்.
சிவக்குமாரின் மனைவியாக நடித்து இருந்தார். குடும்பத்தின் நலனுக்காக ஒளி தரும் மெழுகுவர்த்தியாக காலத்தின் கட்டாயத்தின் பேரில் இதுபோன்ற வேடம் ஏற்று அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் பிரமிளா. இதில் லலிதா என்ற கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருப்பார் பிரமிளா. ஆண்டவனின் தோற்றத்திலே அழகு சிரிக்குது என்ற பாடலில் இவரது நடிப்பு சூப்பர்.
சின்னப்ப தேவர் இவரது நடிப்பை கண்டறிந்து கோமாதா என் குலமாதா படத்தில் நடிக்க வைத்தார். அன்பு தெய்வம் என்ற பாடல் பசுவின் பெருமைகளை எடுத்துரைக்கும்.
எம்ஜிஆருடன் நேற்று இன்று நாளை படத்தில் நடிக்க இருந்த வாய்ப்பு கால்ஷீட் பிரச்சனையால் கூடாமல் போனது. இந்தப்படத்திற்காக பாடும் போது நான் தென்றல் காற்று பாடல் கூட எம்ஜிஆருடன் ஆடுவதற்கான ஒத்திகை நடந்தது குறிப்பிடத்தக்கது. வள்ளி தெய்வானை, சொந்தம் படத்தில் இரட்டை வேடம் ஏற்று நடித்து அசத்தினார்.
அறிமுகமான ஒரே படத்தில் 18 படங்களில் நடித்து அசத்தினார். நடிகர் திலகம் சிவாஜி நடித்த மனிதரில் மாணிக்கம், தங்கப்பதக்கம் வேடத்தில் நடித்து அசத்தினார். இதே படத்தில் ஸ்ரீகாந்தின் மனைவி விமலாவாக நடித்தார்.
சோதனை மேல் சோதனை பாடலில் காஞ்சி போன பூமி எல்லாம் வற்றாத நதிகளைப் பார்த்து ஆறுதல் அடையும். ஆனால் அந்த நதியே காஞ்சிப் போயிட்டா என்ற டயலாக்கை பேசி அசத்தியிருப்பார். இன்று வரை மறக்க இயலாத ட்ரெண்டிங் வசனம் தான் அது. கவரிமான் படத்தில் சிவாஜியின் மனைவியாக நடித்து இருந்தார்.
ரத்தபாசம் படத்தில் நடிப்பில் ஜொலித்தார். ஜெய்சங்கருடன் அன்பு சகோதரர்கள், நாகேஷ_டன் கை நிறைய காசு, முத்துராமனுடன் பாவத்தின் சம்பளம், பிரியாவிடை, மல்லிகைப்பூ கமலஹாசனுடன் பருவகாலம், உன்னைச்சுற்றும் உலகம், ரஜினியுடன் சதுரங்கம், பிரபுவுடன் சூரக்கோட்டை சிங்கக்குட்டி, கார்த்திக்குடன் கெட்டி மேளம், சத்யராஜூடன் ஜல்லிக்கட்டு, விசுவுடன் காவலன் அவன் கோவலன், டி.ராஜேந்தருடன் என் தங்கை கல்யாணி ஆகிய படங்களில் நடித்து அசத்தினார். இறுதியாக அவர் நடித்த படம் முதலாளியம்மா.
இவர் அமெரிக்காவில் 25 வருடம் செக்யூரிட்டியாக பணிபுரிந்தாராம்.