தமிழ் சினிமாவில் காலங்காலமாக நடந்து வருவதாக கூறப்படும் “அட்ஜெஸ்ட்மென்ட்” என்ற வார்த்தை சமீப காலமாக பேச்சுப்பொருளாக மாறி வருகிறது. இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவிலும் இது குறித்த விவாதங்களும் சர்ச்சைகளும் எழுந்து வருகின்றன.
மீ டூ…
பெண்களுக்கு அனுதினமும் நிகழும் பிரச்சனைகளை மனம் திறந்து உரையாடுவதற்காக கடந்த 2006 ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் டரானா புர்கே என்பவரால் உருவாக்கப்பட்ட வாக்கியம்தான் “மீ டூ”.
இதனை தொடர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு அமெரிக்க நடிகையான அலைசா மிலானோ என்பவரால் இந்த “மீ டூ” என்ற வார்த்தை உலகம் முழுவதும் பிரபலமாக அறியப்பட்டது. அலைசா மிலானோவை தொடர்ந்து உலகம் முழுவதும் உள்ள பல முக்கிய நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் அத்துமீறல்களை குறித்து வெளிப்படையாக பேசத்தொடங்கினர். இப்படித்தான் இது இந்தியாவிற்குள்ளும் நுழைந்தது.
இந்தியாவில் “மீ டூ”
கடந்த 2018 ஆம் ஆண்டு பாலிவுட்டின் முன்னணி நடிகையாக திகழ்ந்த தனுஸ்ரீ தட்டா என்பவர், ஒரு பிரபல தொலைக்காட்சிக்கு பேட்டித் தந்தபோது, பிரபல பாலிவுட் நடிகரான நானா படேக்கர் பல வருடங்களுக்கு முன்பு ஒரு திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்று பகீரங்கமாக கூறினார். இதனை தொடர்ந்து இந்திய அளவில் பல நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் அத்துமீறல்களை குறித்து வெளிப்படையாக பேசத்தொடங்கினர்.
குறிப்பாக தமிழகத்தில் பாடலாசிரியர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக பாடகி சின்மயி வைத்த குற்றச்சாட்டு தமிழகத்தையே திடுக்கிட வைத்தது. இந்த விவகாரத்தை தொடர்ந்து வைரமுத்து மேல் தேவையில்லாமல் சின்மயி குற்றம் சாட்டுகிறார் என்று பலரும் கூறி வந்தனர். எனினும் பெரும்பான்மையான ரசிகர்கள் சின்மயிக்கு பக்கபலமாக நின்றனர். இந்த விவகாரத்தை தொடர்ந்து வைரமுத்துவை தங்களது திரைப்படங்களில் பயன்படுத்துவதை பல இயக்குனர்கள் தவிர்த்து வந்தனர்.
பிரேம பிரியா
தமிழில் பல திரைப்படங்களில் வடிவேலு, சந்தானம் ஆகியோருடன் இணைந்து நடித்த காமெடி நடிகையான பிரேம பிரியா சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் நிருபர் “தமிழ் சினிமாவில் அட்ஜெஸ்ட்மன்ட் என்ற வார்த்தை தற்போது பேச்சுப்பொருளாகியுள்ளது. இது போன்ற சம்பவங்களை நீங்கள் சந்தித்து இருக்கிறீர்களா?” என்ற கேள்வி கேட்கப்பட்டது.
இதையும் படிங்க: இவர் பாரதிராஜாவா? இளையராஜாவா? கன்ஃப்யூஸ் ஆன ரசிகர்… அடப்பாவமே!!
இந்த கேள்விக்கு பதிலளித்த பிரேம பிரியா “இந்த கேள்வியே முதலில் தவறான கேள்வி. வேலை வெட்டி இல்லாத பெண்கள் சினிமாவில் வரவேண்டும் என ஆசைப்பட்டு, ஒரு பப்ளிசிட்டிக்காக சினிமாக்காரர்களை குறித்து தவறாக பேசுகிறார்கள். அட்ஜெஸ்மன்ட் கேட்கிறார்கள் என்றால் அந்த பெண்கள் ஏன் போகிறார்கள்?” என கேள்வி எழுப்பினார்.
மேலும் பேசிய அவர் “மற்றவர் அட்ஜெஸ்ட்மென்ட் கேட்கும் அளவிற்கு அந்த நடிகைகள் நடந்துகொள்வதனால்தான் அவ்வாறு கேட்கிறார்கள். சினிமாக்காரர்களை தப்பாக பேசுகிற இந்த பெண்கள் எல்லாரும் தப்பான பெண்களாகத்தான் இருப்பார்கள்” என கூறியிருந்தார். பிரேம பிரியாவின் இந்த பேச்சு தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
Archana: முந்தையை…
தமிழ் சினிமாவில்…
Keerthy Suresh:…
Jyothika: சமீப…
Dhanush: நடிகர்…