விசில் போடு பாடலை தியேட்டருக்கு வந்து பாருங்க... நான் பெட் கட்டுறேன்..! பிரேம்ஜி சவால்
கோட் படத்தின் பாடல்கள் பெரிய அளவில் ரீச்சாகவில்லை. அதற்கு யுவனின் இசை தான் காரணம்? என்னாச்சு யுவனுக்கு என்றெல்லாம் சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்தார்கள். இதனால் தான் படத்திற்கு ஆடியோ லாஞ்சே வைக்கவில்லை என்றெல்லாம் பற்ற வைத்தார்கள்.
இது ஒரு புறம் இருக்க கோட் படத்தின் ரிலீஸ்சுக்கு இன்னும் இரண்டே நாள் தான் இருப்பதால் படத்தின் அப்டேட்டுகள் மணிக்கொரு முறை வலைதளத்தில் தெறிக்க விடுகின்றன. இதனால் ரசிகர்கள் உற்சாக மழையில் நனைந்து கொண்டு இருக்கிறார்கள். விஜய் கேரியரில் இப்படி ஒரு படமா என்று கேட்க வைத்துள்ளார்கள். வெங்கட்பிரபுவும் தன் ஒட்டுமொத்த உழைப்பையும், திறமையையும் படத்தில் கொட்டியுள்ளார்.
டெக்னிக்கல் லெவலைப் பார்க்கும் போது பல காட்சிகள் பிரமிக்க வைக்கின்றன. ஏஐயில் விஜயகாந்த், டீஏஜிங்கில் விஜய். இது போதாதா? படத்தை இப்பவே பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை விதைக்க. இப்போது பிரேம்ஜி படத்தின் இசை மற்றும் பாடல்கள் குறித்த அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இவர் சொல்வது இதுதான்.
விசில் போடு பாடல் படத்தில் இருக்காதாம். அதுவும் நாம் கேட்ட மாதிரி இருக்காதாம். இது வேற லெவலில் இருக்கும். அப்போது தியேட்டரில் திருவிழாக் கோலம் தான் என படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபுவும் தன் பங்கிற்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.
யுவன் பாடல்கள் பரவாயில்லை. சின்ன சின்ன பாடல் ரொம்ப பிடிச்சிருந்தது. இப்போ சும்மா ரிலீஸ் ஆகாம வர்ற கமெண்ட்ஸைப் பார்த்துட்டு ஃபன்னா பேசக்கூடாது. மெயினா தியேட்டர்ல வந்து படத்தைப் பாருங்க. சாங்கைப் பாருங்க. பார்த்துக்கலாம்.
Also read: கோட் படத்துக்கு அனுமதி வரும்னு பார்த்தா கட்சிக்கு வந்துவிட்டதே ஆப்பு!
'விசில் போடு' பாடலை சரியில்ல அது இதுன்னு சொன்னாங்க. ஆனா இப்போ சொல்றேன். பெட் கட்டுறேன். விசில் போடு பாடலை தியேட்டர்ல வந்து பாருங்க. அதுல ஒரு பெரிய மேஜிக் வேற லெவல்ல வந்துருக்கு. யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு வந்துருக்கு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.