ரௌடி பேபியாக வலம் வரும் வனிதா எங்க? கையெடுத்து கும்பிட தோணும் பிரீத்தா எங்க? நெகிழ வைக்கும் வீடியோ

by Rohini |
vanitha
X

vanitha

தமிழ் சினிமாவில் ஒரு மதிப்புமிக்க நடிகராக இருப்பவர் நடிகர் விஜயகுமார். இவர் ஒர் சிறந்த குணச்சித்திர நடிகரும் கூட. கிட்டத்தட்ட 400 படங்களுக்கு மேல் நடித்த விஜயகுமார் அனைத்து மொழி படங்களிலும் நடித்து ஒரு முன்னனி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றவர்.

சமீபகாலமாக குணச்சித்திர வேடங்களில் நடித்தும் வருகிறார். இவருக்கு இரண்டு மனைவிகள். முத்துக்கண்ணு மற்றும் நடிகை மஞ்சுளா. முதல் மனைவியின் மூலம் கவிதா, அனிதா, அருண்விஜயும் இரண்டாவது மனைவியின் மூலம் வனிதா, பிரீத்தா, ஸ்ரீதேவியும் ஆக 6 பிள்ளைகளுக்கு தகப்பனாக விஜயகுமார் இருந்து வருகிறார்.

இதையும் படிங்க : இப்ப இருக்க நடிகர்களுக்கு ஒன்னுமே தெரியாது… விஜயகாந்தை கேட்டால் அக்குவேறு ஆணிவேறு என பிட்டு வைப்பார்!

இதில் வனிதா மட்டும் தன் குடும்பத்துடன் பிரச்சினை செய்து தனியாக வாழ்ந்து வருகிறார். மற்ற அனைவரும் ஒரே குடும்பமாக சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக 2000 ஆண்டுகளில் ஒரு கனவு நாயகியாக இருந்தவர் பிரீத்தா. மாடல் உடையில் அனைவரையும் அசத்தி வந்த பீரித்தா இயக்குனர் ஹரியை திருமணம் செய்து இப்போது குடும்ப குத்து விளக்காக மாறியிருக்கிறார்.

அவர் எப்போதுமே புடவையில் மட்டுமே காட்சியளிப்பார். அதுதான் அவருக்கும் பிடிக்குமாம். நெற்றி நிறைய குங்குமம் இட்டு, தள தள புடவை கட்டி பார்க்கவே ஒரு மகாலட்சுமியை பிரதிபலிக்கும் தோற்றத்தில் தான் காணப்படுவார் ப்ரீத்தா.

இந்த நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டிருக்கிறார். நேற்று வரலட்சுமி விரதம் என்பதால் தன் வீட்டில் நடத்திய வழிபாட்டை வீடியோவாக பதிவிட்டிருக்கிறார். அதை பார்க்கும் போது சினிமா நடிகையாக இருந்து இந்தளவுக்கும் ஆன்மீகத்தில் ஆர்வம் காட்ட முடியுமா என்ற வியப்பை ஏற்படுத்துகிறது.

இதையும் படிங்க : பாலசந்தரோ? பாரதிராஜாவோ இல்லங்க… கோலிவுட்டில் முதல் தேசிய விருது இயக்குனர் இவர் தான் தெரியுமா?

இந்தப் பக்கம் வனிதா அடிக்கும் லூட்டிகளையும் அவர் அணியும் உடைகளையும் பார்க்க முடிகின்றது. வனிதாவிற்கும் அவரது குடும்பத்தாருக்கும் பிரச்சினைகள் இருந்தாலும் ஒரே குடும்பத்து வாரிசு தான் வனிதா. ஆனால் பிரீத்தா எங்க? இவர் எங்க? என்று தான் நினைக்க தோன்றுகிறது.

அந்த வீடியோவை பார்க்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும் : https://www.instagram.com/reel/CwZ4GE7hBsW/?igshid=MTc4MmM1YmI2Ng==

Next Story