‘லியோ’ படத்தில் இணைந்த மற்றுமொரு பிரபல நடிகை!.. அம்மணிக்கு போற இடமெல்லாம் சிறப்பு தான்..

vijay
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது ‘லியோ’ படப்பிடிப்பு. முழு மூச்சாக காஷ்மீரில் படப்பிடிப்பை நடத்தி வரும் லோகேஷ் ஒவ்வொரு நடிகர்களின் போர்ஷனை முடித்து சென்னைக்கு வரிசையாக அனுப்பி வருகிறார்.
சமீபத்தில் பாலிவுட் நடிகரான சஞ்சய் தத் இந்தப் படத்தில் இணைந்துள்ளார். இதற்கு முன் கௌதம் மேனன், மிஷ்கின் போன்றவர்களின் போர்ஷன் எல்லாம் முடிந்து சென்னைக்கு வந்து விட்டனர். படத்தின் புரோமோ வீடியோவையும் வெளியிட்டு ரசிகர்களை எதிர்பார்ப்பில் மூழகடித்திருக்கிறார் லோகேஷ்.

vijay trisha
நேற்று தனது 37வது பிறந்த நாளை கொண்டாடிய லோகேஷ் காஷ்மீரில் அவருக்காக ஒரு பெரிய பார்ட்டியே வைத்து கொண்டாடியிருக்கின்றனர். திரிஷா முதல் விஜய், சஞ்சய் தத் என அனைவரும் லோகேஷுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டனர்.
ஏற்கெனவே விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க பிக்பாஸ் ஜனனியும் இந்தப் படத்தில் இணைந்திருப்பதால் ஒருவேளை ஜனனி விஜய்க்கு தங்கை கதாபாத்திரமாக இருக்கலாம் எனக் கூறிவருகின்றனர்.இந்த நிலையில் லியோ படத்தில் மற்றுமொரு பிரபல நடிகை இணைந்திருக்கிறார் என்று பயில்வான் ரெங்கநாதன் கூறியிருக்கிறார்.

priya
பல படங்களில் நடித்து மக்களின் அபிமானங்களை பெற்றவர் தான் நடிகை பிரயா பவானி சங்கர். அவர்தான் இப்போது லியோ படத்தில் இணைந்துள்ளதாக பயில்வான் ரெங்கநாதன் கூறினார். அதை நிரூபிக்கம் வகையில் பிரியா பாவனி சங்கர் தான் காஷ்மீரில் இருக்கும் மாதிரியான புகைப்படத்தை பகிர்ந்ததால் அவர் லியோவில் நடிக்கிறார் என்று பயில்வான் கூறினார்.
இதையும் படிங்க : ‘அகரம்’ அறக்கட்டளை நிறுவ காரணம் யாருனு தெரியுமா?.. இந்த நடிகரின் இன்ஸ்பிரேஷன் தானாம்..