அந்த பட்டன் பிச்சிக்காம பாத்துக்கோ செல்லம்!.. தூக்கலான கிளாமரில் அதிரவிட்ட பிரியாமணி...
பாலக்காடு ஐயர் குடும்பத்தை சேர்ந்த பிரியாமணி பிறந்து வளர்ந்தது எல்லாம் பெங்களூரில்தான். இவரின் அப்பா தொழிலதிபராக இருந்தார். டீன் ஏஜ் முதலே மாடலிங் துறையில் ஆதிக ஆர்வம் ஏற்பட்டது. சில துணிக்கடைகளுக்கு விளம்பர மாடலிங் செய்தார். பெங்களூரில் பனிரெண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அதுவும் பாரதிராஜா இயக்கத்தில் உருவான கண்களால் கைது செய் திரைப்படம். பாரதிராஜா என்றதும் உடனே நடிக்க ஒப்புக்கொண்டார். முடிந்தவரை அந்த படத்தில் நன்றாகவே நடித்தார். அதன்பின் தமிழ், மலையாளம், தெலுங்கு என மாறி மாறி நடிக்க துவங்கினார். அமீர் இயக்கத்தில் பிரியாமணி நடித்த பருத்திவீரன் படம் அவருக்கு தேசிய விருதையும் பெற்று தந்தது.
அதன்பின் பல தமிழ் படங்களில் நடித்தாருந்தாலும் சிறப்பாக எதுவும் அமையவில்லை. ஒருகட்டத்தில் தெலுங்கு திரைப்படங்களில் தூக்கலான கவர்ச்சியும் காட்ட துவங்கினார். ஒருகட்டத்தில் நிறைய கன்னட படங்களிலும் நடிக்க துவங்கினார்.
பெங்களூரை சேர்ந்த முஸ்தபா ராஜ் என்பவரை காதல் திருமணமும் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை இவர். மேலும், நிறைய டிவி நடன நிகழ்ச்சிகளில் ஜட்ஜ்ஜாகவும் கலந்து கொண்டார். இதில் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட டிவி நிகழ்ச்சிகளும் அடக்கம்.
அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் படத்திலும் பிரியாமணி நடித்திருந்தார். அவ்வப்போது கட்டழகை வேறலெவலில் காட்டும் உடைகளை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளிட்டு வருகிறார். இந்நிலையில், பிரியாமணியின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.