கன கச்சிதமா இருக்கு கட்டழகு!.. தாராளம் காட்டி விருந்து வைக்கும் பிரியாமணி....

கர்நாடகாவை சேர்ந்தவர் பிரியாமணி. தமிழில் பாரதிராஜா இயக்கிய கண்களால் கைது செய் படம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானார். அதன்பின் தொடர்ந்து பல படங்களிலும் நடித்தார். தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்தார். ஆனால், விஜய், அஜித் போன்ற நடிகர்களின் பார்வை இவர் மீது படவில்லை.
இதை ஒரு பேட்டியிலேயே கூறி வருத்தப்பட்டார். அமீர் இயக்கத்தில் கார்த்தி அறிமுகமான பருத்திவீரன் படத்தில் முத்தழகாக வந்து ரசிகர்களை கவர்ந்தார். இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதும் பெற்றார். ஆனால், அதன் பின்னரும் முன்னணி நடிகர்கள் இவருடன் நடிக்க விரும்பவில்லை.
எனவே, கர்நாடகாவை சேர்ந்த தொழிலதிபர் முஸ்தபா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் நிறைய டிவி நிகழ்ச்சிகளில் நடுவராக கலந்து கொண்டார். பெரும்பாலும் நடன நிகழ்ச்சிகளில் இவரை நடுவராக பார்க்க முடிந்தது. சில திரைப்படங்களிலும் நடித்தார்.
இதையும் படிங்க: ஒரு போட்டோவுக்கு போஸ் கொடுத்தது குத்தமாடா?!.. ரஜினி படத்துக்கு வந்த பெரிய சிக்கல்!..
இப்போது மீண்டும் தமிழ் படங்களிலும் நடிக்க துவங்கியுள்ளார். ஒருபக்கம் விட்ட மார்க்கெட்டை பிடிப்பதற்காக கவர்ச்சியான உடைகளில் கட்டழகை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். இதன் மூலம் தனக்கு சினிமா வாய்ப்புகள் வரும் என நம்பி காத்திருக்கிறார்.
அந்த வகையில் சிக்கென்ற உடையில் அழகை காட்டி பிரியா மணி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.