ப்ப்பா!. சிக்குன்னு இருக்கு!. ஸ்லிம் உடம்பை நச்சுன்னு காட்டும் பிரியாமணி..
பெங்களூரை சேர்ந்தவர் பிரியாமணி. இவர் முதலில் நடித்தது ஒரு தெலுங்கு படத்தில்தான். தமிழில் பாரதிராஜா இயக்கிய கண்களால் கைது செய் படம் மூலம் அறிமுகமானார்.
தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்தார். கார்த்தி நடித்த பருத்திவீரன் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதையும் வாங்கினார்.
ஒருகட்டத்தில் வாய்ப்புகள் இல்லாமல் போகவே ராவணன் படத்தில் விக்ரமின் தங்கையாக கூட நடித்தார். அதுன்பின் அவரை தமிழ் படங்களில் பார்க்கமுடியவில்லை.
ஆனால், தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். 5 வருடங்களுக்கு முன்பு முஸ்தபா ராஜ் என்பவரை திருமணமும் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து நடித்து வருகிறார். மேலும், தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சில நடன நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்தார்.
தற்போது மீண்டும் கவர்ச்சி உடைகளில் ஸ்லிம் உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட துவங்கிவிட்டார்.
அந்த வகையில், சுடிதாரில் கட்டழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.