Connect with us

சிவகார்த்திகேயன் கூட பேசும்போதே அதுவா…இருந்தது சொல்கிறார் பளிச்சிடும் புன்னகைக்கு சொந்தக்காரி

Cinema History

சிவகார்த்திகேயன் கூட பேசும்போதே அதுவா…இருந்தது சொல்கிறார் பளிச்சிடும் புன்னகைக்கு சொந்தக்காரி

டாக்டர் பட ஹீரோயின் பிரியங்கா அருள் மோகன். செல்லம்மா பாடல் எந்த அளவுக்கு பிரபலமானதோ அந்த அளவுக்கு இந்தப்பாடலில் வந்த ஹீரோயினும் பிரபலமானார்கள். எப்பவும் மகிழ்ச்சி நிறைந்த இவரது முகத்தில் மலரும் புன்னகை காண்போரைக் கவர்ந்திழுக்கச் செய்தது.

இவரது லைப்ல எதிர்பார்க்காத அளவுக்கு நிறைய பாசிட்டிவ்வான விஷயங்கள் நடந்துள்ளது. இது எல்லாவற்றிற்கும் காரணம் கடவுளின் அருள் தான் என்கிறார் பிரியங்கா அருள் மோகன்.

priyanka arul mohan

இவர் சென்னையில் நவ.20, 1994 அன்று பிறந்தார். தமிழை ரொம்பவே சூப்பராக பேசுவாங்க. இதுக்குக் காரணம் இவரோட அப்பா அருள் மோகன் தான். இவரது அப்பா ஒரு தமிழன். இவரது அம்மா கிருஷ்ண மோகன் கர்நாடகாவைச் சேர்ந்தவர். அதனால் பிரியங்கா தமிழ், கன்னடம் இருமொழிகளிலும் புலமை பெற்றவர்.

சென்னையில் உள்ள சிஷ்யா பள்ளியில் படித்ததும் எஸ்ஆர்எம் மில் டிகிரி முடித்தார். மாடலிங்கில் ஆர்வம் உள்ளதால் அந்தத் துறையில் படிக்கும்போதே களம் இறங்கினார். அப்போதே இவர் கன்னட மொழிப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 2019ல் வெளியான ஒக்கதே கெல்லா என்ற கன்னட படத்தில் அறிமுகமானார்.

துவக்கத்தில் நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்த பிரியங்காவுக்கு இயக்குனர்கள் தான் சப்போர்ட்டாக இருந்தாங்க. நடிப்பதற்கு தைரியம் கொடுத்தாங்க. அதனால நடிப்பு கத்துக்க வேண்டும் என்று நினைத்த பிரியங்கா பெங்களூரில் உள்ள ஆக்டிங் ஸ்கூல்ல சேர்ந்து நடிப்பைக் கத்துக்கிட்டாங்க.

priyanka arul mohan

அங்க இவர் தியேட்டர் ஆர்டிஸ்டா பல நாடகங்கள் நடிச்சிருக்காங்க. அதன் மூலமா இவருக்கு தெலுங்கு படத்தில நடிக்கறதுக்கு வாய்ப்பு கிடைச்சது. அந்த வகையில நானியுடன் சேர்ந்து கேங் லீடர் படத்தில நடித்தார். இது தான் அவருக்கு தெலுங்கில் முதல் படம். அமைதியான பொண்ணாக நடித்து இருந்தார். படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

பொதுவாகவே பிரியங்காவுக்கு மேக் அப் போடுறதுக்கு பிடிக்காதாம். நடிப்புக்கு வந்ததும் கேமரா முன்னாடி நிக்கணுமே என்ற கட்டாயத்தில் தான் மேக் அப் போட்டுள்ளதாகக் கூறுகிறார். தொடர்ந்து சர்வானந்த் கூட ஜோடியாக ஸ்ரீகரம் படத்தில் நடித்து மாஸான ஹீரோயின் ஆனார்.

இவர் தான் குடும்பத்தில் ஒரே பொண்ணு. ஆனாலும் ரொம்ப செல்லம் இல்லை. மிடில் கிளாஸ்ல எப்படி இருப்பாங்களோ அப்படி தான் நானும் என்கிறார். அப்போது தான் சிவகார்த்திகேயன் கம்பெனியில இருந்து இவருக்கு போன் வந்தது. உடனே ஓகே சொல்லிவிட்டார். அதுதான் டாக்டர்.

priyanka arul mohan

ஒரே நேரத்தில் இரு படங்கள் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இன்னொன்று டான் படம். இதிலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகவே நடிக்கிறார். இந்தப்படத்தை சிபிச்சக்கரவர்த்தி இயக்குகிறார். சூர்யாவின் எஸ்40 படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்தப்படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார்.

டாக்டர் படத்தில் நடித்த அனுபவம் பற்றி இப்படி சொல்கிறார்.

முதல் ஒரு மாதத்திற்கு கதையே எனக்குத் தெரியாது. முதல் தடவை நான் கேட்டபோது கதை ரொம்ப காமெடியா இருந்தது. சிவகார்த்திகேயன் கூட பேசும்போதே சிரிப்பா வந்துக்கிட்டு இருந்தது. ஆனால் அவர் நல்லா ஷாட் பெர்பார்ம் பண்ணிருவாரு. எதிர்ல நிக்கறவங்களுக்குத்தான் அப்படியே என்ன செய்றதுன்னு இருக்கும் என்று தன்னைச் சுட்டிக் காட்டுகிறார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top