More
Categories: Entertainment News

இப்படி பண்ணியே ஹீரோக்களை கவுக்குற!….பிரியங்கா மோகனின் நச் கிளிக்ஸ்…

கன்னட, தெலுங்கு படங்களில் நடித்து வந்தவர் பிரியங்கா மோகன். சிவகார்த்திகேயன் நடித்து ஹிட் அடித்த டாக்டர் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் நுழைந்தார். அப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போதே சூர்யா நடிப்பில் உருவான ‘எதற்கும் துணிந்தவன்’ படத்திலும் நடித்தார். அப்படத்திற்கு பின் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ‘டான்’ படத்தில் நடித்தார்.

Advertising
Advertising

இதுவரை இவர் நடித்ததே 6 திரைப்படங்கள்தான். ஆனாலும், ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார். நெல்சன் அடுத்து இயக்கவுள்ள ரஜினி படத்திலும் இவர் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது.

ஒருபக்கம், அழகான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

Published by
சிவா

Recent Posts