Categories: Entertainment News

எப்பவும் கியூட்டு…அதனால்தான் நீ டாப்பு!…பிரியங்கா மோகனின் க்யூட் புகைப்படங்கள்…

கன்னட, தெலுங்கு படங்களில் நடித்தவர் பிரியங்கா மோகன். தெலுங்கில், நானி நடித்த கேங்க் லீடர் படம் மூலம் தெலுங்கு சினிமாவில் நுழைந்தார். டாக்டர் என்கிற ஒரே திரைப்படத்தில் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார்.

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படம் அவருக்கு ஒரு நல்ல துவக்கமாக அமைந்தது. சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படத்திலும் நடித்திருந்தார்.

சிவகார்த்திகேயனின் நடிப்பில் சமீபத்தில் வெளியான டான் படத்திலும் நடித்திருந்தார். அதோடு, நெல்சன் இயக்கத்தில் ரஜினியின் புதிய படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என செய்திகள் கசிந்துள்ளது.

ஒருபக்கம், க்யூட்டான உடைகளை அணிந்து சமூகவலைத்தளங்களில் தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் வெளிநாடு சுற்றுலா சென்ற அவர் அங்கு எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

Published by
சிவா