நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்னா அது உங்களால மட்டும் தான். ராதா குறிப்பிடுவது யாருன்னு தெரியுமா?

நடிகை ராதா 80...90களில் ரசிகர்களின் இதயத்தைத் துளைத்து தூங்க விடாமல் செய்தவர். ராதா ராதா நீ எங்கே...என்று முணுமுணுக்க வைத்தது அந்த வசீகரப் பெயர். பெயருக்கேற்றாற் போல் அழகிலும் வசீகரிக்கக் கூடியவர்.

இவர் நடித்தால் போதும். படங்கள் ஹிட் என்ற நிலைக்கு வந்து விடும். இவர் ரஜினி, கமல் என இரு மாபெரும் நடிகர்களோடு நடித்ததோடு நில்லாமல் நடிகர் திலகம் சிவாஜியுடனும் இணைந்து நடித்துள்ளார்.

அந்த அளவு பெருமைக்குரியவர். தமிழை தங்கிலீஷாக பேசும் நடிகைகளுக்கு மத்தியில் ஓரளவு தெளிவான தமிழில் பேசுபவர் ராதா. அவரே அவரது வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத நெகிழ்ச்சியான சில தருணங்களை இவ்வாறு பேசுகிறார்.

ஒரு பொண்ணுக்கு பொறந்த வீடு, புகுந்த வீடுன்னு சொல்வாங்க. ஆனா என்னைப் பொருத்த வரை பொறந்த வீடு, புகுந்த வீடு, என்னை வளர்த்து ஆளாக்குன இந்த வீடு. என் குரு பாரதிராஜா சார். மாதா பிதா குரு தெய்வம் அப்படிங்கற வரிசையில குருவாக வருபவர்கள் இயக்குனர்கள் தான் எனக்கு குரு.

bharathiraja

7ம் வகுப்பு படிக்கும்போது நான் ரஜினிகாந்தின் ஆடுபுலி ஆட்டம் படம் பார்த்தேன். நடிகர் திலகத்துடன் நான் நடிப்பேன்னு கனவுல கூட நினைச்சுப் பார்க்கல. அப்புறம் கமல் சார் கூட நடிச்சேன். ரெண்டு ஜெனரேஷன் கூட நடிச்சிருக்கேன். 10 வருஷம் சினிமா எப்படி போச்சுன்னு தெரில. என்னோட ட்ரீம்ஸ்ல பார்த்த ஹீரோவோட நடிச்சிருக்கேன்.

அதை விட என் குரு எனக்கு கொடுத்த பாக்கியம். அதை விட சொல்ல முடியல. அதே மாதிரி கோதண்டராமரெட்டி சார் என் 2வது படத்தையே தெலுங்குல அறிமுகப்படுத்தினாங்க. அங்கு ஒரு டயலாக்க 20, 30 தடவை டேக் எடுப்பேன். அந்த லாங்குவேஜ் எனக்கு டஃப்பா இருந்தது. சிரிச்சிக்கிட்டே பரவாயில்ல. நல்லா இருக்கும்மா...பண்ணுன்னு என்கரேஜ் பண்ணுவாங்க. ராகவேந்திரா சார் என்னை ஜல் ஜல்னு கிளாமரா ஆட வைச்சாங்க.

வெறும் மண்ணா இருந்த என்னை உருவமா கொடுத்து ராதாவா மாத்துனாங்க. பாரதிராஜா சார் ஒரு நாள் என்னைக் கூப்பிட்டு சொன்னாங்க. இந்தாம்மா உன் பேர மாத்தப் போறேன். அப்டீ ஷாக் ஆயிடுச்சி. ஏன் பேர மாத்தப் போறீங்க. ஏன் மாத்தணும்? இல்ல...இல்ல...சந்திரிகா நல்ல பேரு தான். ஆனாலும் பேர மாத்தப்போறேன். அம்மாகிட்ட போய் சொன்னேன்.

radha, radha

அம்மா எனக்கு பேர மாத்த வேண்டாம்மா...எனக்கு இந்தப் பேரு போதும்...என்ன டைரக்டர் சார் சொல்றாங்களோ அதே மாதிரி செய்யுன்னு சொன்னாங்க. சோ...என்னைக் கூப்பிட்டு ஒரு ஷாட்டுல ராதா....அப்டீன்னாங்க. ராதா....ஓகே. ஆனா...இப்ப சொல்றேன். என் பேரையே நான் மறந்து போய்ட்டேன். கொஞ்ச நாளா...ராதா அப்டீன்னு சொல்லும்போது...ஐ டோன்ட் நோ...இதுக்கு மேல எனக்கு சொல்லத் தெரியாது.

Karthick, Radha in alaigal oyivathillai

பாரதிராஜா சார் என் கனவு எல்லாம் நிறைவேத்தி இப்ப நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்னா...அது உங்களால மட்டும் தான். அலைகள் ஓய்வதில்லை. அதுக்கு அப்புறம் கிளாமரா கொஞ்ச நாளா ஆக்ட் பண்ணிக்கிட்டு இருந்தேன். காதல் ஓவியம் மாதிரி எனக்கு பர்பார்மன்ஸ் கொடுத்தீங்க.

அப்புறமா முதல் மரியாதை. இதுக்கு மேல ஒரு ஆர்ட்டிஸ்ட் உங்ககிட்ட எதுவுமே கேட்க முடியாது. நான் நினைக்கிறேன். அவரோட நிறைய படத்துல நான் நடிச்சிருக்கேன். அந்த பெருமை கூட எனக்கு இருக்கு. நன்றி. என நெகிழ்ச்சியுடன் பேசினார் ராதா.

Related Articles
Next Story
Share it