ரகசிய கேமரா வைத்து நடிகையை ரசிப்பார்கள்!.. பகீர் தகவலை சொன்ன ராதிகா!...
Malayala cinema: சினிமாவில் பெண்கள் பாலியல் சீண்டல்களையும், பாலியல் தொல்லைகளையும் சந்திப்பது என்பது காலம் காலமாக தொடர்ந்து வருகிறது. ஆனால், வெளியே சொன்னாலோ, போலீசில் புகார் அளித்தாலோ நம்மை ஒதுக்கிவிடுவர்கள்.. சினிமாவில் நடிக்க வாய்ப்பு கொடுக்க மாட்டார்கள் என பயந்து பல பெண்களும் வெளியே சொல்வதில்லை.
நடிகர் சங்கம், இயக்குனர் சங்கம் என சென்று புகார் அளித்தாலும் ஒன்றும் நடக்காது. கண்டிக்கிறோம் என சொல்லி அனுப்பிவிடுவர்கள். ஒரு நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள். இதனால், திரைத்திறையில் பாலியல் தொந்தரவுகளை சந்திக்கும் பெண்கள் யாரிடமும் எதுவும் சொல்ல மாட்டார்கள்.
இதையும் படிங்க: குட் பேட் அக்லியில் விஜயின் டயலாக்கா? அதைவிட இன்னொரு சர்ப்ரைஸ் கோட்டில்… பரபர அப்டேட்!
அதுவும் வெளியூரில் படப்பிடிப்பு எனில் இரவில் நடிகைகள் தங்கியிருக்கும் ஹோட்டல் அறைக்கே வந்து பாலியல் தொல்லை கொடுப்பார்கள். பெரும்பாலும் ஹீரோ, இயக்குனர், தயாரிப்பாளர் இவர்களில் யாரேனும் ஒருவர்தான் அதை செய்வார். இதையெல்லாம் தாண்டித்தான் இங்கே ஒரு நடிகையும் உருவாகிறார். இது தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என எல்லா மொழி சினிமாவிலும் நடக்கிறது.
அதேநேரம், யாரேனும் ஒரு நடிகை துணிச்சலாக இதுபற்றி பேசும்போதும், புகார் கொடுக்கும்போதும் மட்டுமே இந்த விஷயத்தை எல்லோரும் பேசுவார்கள். ஊடகங்களில் இதுபற்றி அதிக செய்திகள் வரும். ஆனால், அதன்பின் காணாமல் போய்விடும். சமீபத்தில் கேரள திரையுலகில் ஒரு நடிகை கொடுத்த புகாராலும், ஹேமா கமிட்டி விசாரணையின் அறிக்கை வெளியே கசிந்ததாலும் அங்கு பாலியல் புகார்களில் பலரும் சிக்கியிருக்கிறார்கள்.
அம்மா எனும் நடிகர் சங்கத்தில் தலைவரான மோகன்லால் உட்பட பலரும் ராஜினாமா செய்துவிட்டனர். நடிகர் சித்திக், ஜெயசுர்யா, இயக்குனர் ரஞ்சித் என பலரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், நடிகை ராதிகா சொன்ன தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கேரள திரையுகில் கேரவானில் ரகசிய கேமராவை பொருத்தி நடிகைகளின் நிர்வாண காட்சிகளை பதிவு செய்கிறார்கள். அந்த காட்சிகளை படப்பிடிப்பு தளத்தில் நடிகர்கள் ஒன்றாக அமர்ந்து செல்போனில் பார்த்து ரசிப்பதை நானே பார்த்திருக்கிறேன். இதனால் ஏற்பட்ட பயத்தில் நான் ஹோட்டலில் அறை எடுத்து ஆடை மாற்றியிருக்கிறேன்’ என சொல்லி இருக்கிறார்.
இதையும் படிங்க: எங்க வீட்ல வந்து உட்கார்ந்து மோகன்லால் செஞ்ச வேலை!.. பகீர் கிளப்பும் சீயல் நடிகை..