வாயக் கொடுத்து வம்படியா மாட்டிக்கிறது! விசாரணையை ராதிகா பக்கம் திருப்பிய கமிஷன்
Actress Radhika: மலையாள சினிமாவில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல்களை பற்றி நடிகை ராதிகா சமீபத்தில் கூறிய ஒரு தகவல் அவருக்கே அது ஆப்பாக அமைந்திருக்கிறது. பெண்களைப் பொறுத்த வரைக்கும் தனக்கு நடக்கும் கொடுமைகள், பாலியல் ரீதியான பிரச்சனைகள் இவைகளை எதிர்த்து குரல் கொடுத்தால் எங்கே நமது வாய்ப்பு பறிபோய் விடுமோ என பயந்து பெரும்பாலான பெண்கள் எல்லா பிரச்சனைகளையும் அடக்கிக் கொண்டு தனக்கான இலக்கை நோக்கி செல்ல முற்படுகின்றனர்.
இதில் பாதிக்கப்படுவது பெண்கள் மட்டும் தான். அந்த வகையில் எல்லா துறைகளிலும் இந்த பாலியல் பிரச்சனைகள் நடந்து கொண்டு தான் வருகின்றது. அதில் சமீபத்தில் மலையாள சினிமாவில் இந்த பிரச்சனை பெரிய பூதாகரமாக மாறி இருக்கிறது. நாள்தோறும் கேரளாவில் நடக்கும் பாலியல் கொடுமைகள் சம்பந்தப்பட்ட செய்திகள் வரும்போது மற்ற மொழி சினிமாக்களில் இருக்கும் பிரபலங்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இதையும் படிங்க: கூலி படத்தில் பெத்த கோடியில் புக் செய்யப்பட்டாரா நாகர்ஜூனா… வெவரம்தான்!..
ஏனெனில் மலையாள சினிமாவில் அமைக்கப்பட்ட ஹேமா கமிஷன் மற்ற மொழி சினிமாக்களுக்கும் வர வேண்டும் என நடிகைகள் கோரிக்கை கொடுத்த வண்ணம் இருக்கின்றனர். இதனால் இன்னும் பல பெரிய பெரிய நடிகர்கள் எல்லா மொழி சினிமாக்களிலும் சிக்குவார்கள் என்பதே அவர்களின் எண்ணமாக இருக்கிறது.
அந்த வகையில் நடிகை ராதிகா கேரளா திரையுலகில் பெரும்பாலும் கேரவனில் ரகசிய கேமராக்களை பொருத்தி நடிகைகளின் நிர்வாண காட்சிகளை பதிவு செய்து அதை படப்பிடிப்பு தளத்தில் இருந்து நடிகர்கள் தங்கள் செல்போனில் பார்த்து ரசிப்பார்கள் என்றும், அதை நானே பலமுறை பார்த்திருக்கிறேன் என்றும் ராதிகா கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க:தமிழ்லயும் தொடரும் பாலியல் தொல்லை.. அசின் கோலிவுட்டே வேணானு ஏன் போனாங்க?
அதனால் நான் கேரவனில் தங்காமல் தனியாக ஒரு ஹோட்டலில் அறை எடுத்து அங்கே எனது ஆடையை மாற்றி இருக்கிறேன் என சொல்லி இருக்கிறார். இது அங்கு நடந்த கொடுமையை பற்றி ராதிகா சொல்லி இருந்தாலும் இன்று தமிழ் திரையுலகில் ஒரு தைரியமான பெண்மணியாக பார்க்கப்படுபவர் ராதிகா. எதற்கும் துணிந்து குரல் கொடுக்கும் பெண்.
அவர் முன்னாடியே இந்த மாதிரி ஒரு அநீதி நடந்திருக்கும் சமயத்தில் ஏன் அதை ராதிகா அப்போது வெளிப்படுத்தவில்லை என அவர் மீது கேள்வியை திருப்பி இருக்கிறார்கள் விசாரணைக் குழு. ராதிகாவிடமிருந்து நேரடியாக வாக்குமூலம் பெறவும் கேரள நடிகர்களின் பாலியல் புகார்களை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு குழு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.
இதையும் படிங்க: ரகசிய கேமரா வைத்து நடிகையை ரசிப்பார்கள்!.. பகீர் தகவலை சொன்ன ராதிகா!…
ராதிகா பேசிய இந்த கருத்துக்கு எதிராக நடிகை பாக்கியலட்சுமி என்பவர் ராதிகா இப்படி கூறியது பெரும் வருத்தத்திற்கு உரியதாக உள்ளது. மற்ற பெண்களுக்கு நடந்தால் அதை அவர் கண்டுக்க மாட்டாரா என்பதே என்னுடைய கேள்வி என கேட்டிருக்கிறார் நடிகை பாக்கியலட்சுமி.