பெங்களூரில் பேருந்து நடத்துனராக வேலை செய்து, நடிப்பின் மீது ஏற்பட்ட ஆர்வத்தால் சென்னை வந்து திரைப்பட கல்லூரியில் படித்து, பாலச்சந்தரின் அறிமுகம் கிடைத்து நடிகரானவர்தான் ரஜினிகாந்த். சினிமாவில் வாய்ப்பு தேடும் போது ரஜினி சென்னையில் மிகவும் சிறிய ரூம்களில் மாத வாடகைக்கு தங்கியிருக்கிறார். குடிசை போன்ற வீடுகளில் கூட அவர் தங்கியதாக சொல்லப்படுகிறது..
சினிமாவில் படிப்படியாக வாய்ப்பு கிடைத்து முன்னேறிய பிறகுதான் ரஜினி சொந்த வீடு வாங்கினார். அதற்கு முன் பல கஷ்டங்களை அவர் அனுபவித்திருக்கிறார். இந்நிலையில், 80களில் ரஜினியுடன் பல படங்களில் நடித்த நடிகை ராதிகா ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘நான் ரஜினியுடன் பல படங்களில் நடித்திருக்கிறேன்.. ஒருநாள் ஷூட்டிங் முடிந்ததும் இரவு ரஜினி அவருடைய பைக்கில் கூட்டிட்டு போய் சென்னை முழுக்க சுத்தி காமிச்சாரு..
அப்ப திடீர்னு ஒரு இடத்தை காட்டி இங்க நான் தூங்கியிருக்கேன். இந்த இடத்தில்தான் தங்கி சாப்பிட்டிருக்கேன் என காட்டி தன்னுடைய ஆரம்ப கால கஷ்டங்களை என்கிட்ட பகிர்ந்துகிட்டார்’ என சொல்லியிருக்கிறார்..
தமிழ் சினிமா உலகில் பழசை மறக்காத நடிகர் ரஜினி. எப்போதும் தான் கடந்து வந்த பாதையை அவர் மறந்தது இல்லை.. அதனால்தான் இன்னமும் அவர் எளிமையாக இருக்கிறார். பேச்சிலும் எளிமை தெரிகிறது. அதனால்தான் மேடைகளில் பேசும் போது பணம் நிம்மதியை கொடுக்காது இந்த தொடர்ந்து சொல்லி வருகிறார்..












