நைட்ல என் ரூமுக்கு வந்து கதவைத் தட்டுனா மூஞ்சை சிதைச்சிடுவேன்... தெறி பதில் சொன்ன ராதிகா
மலையாளத் திரையுலகம் சமீபத்தில் ஹேமா கமிட்டி அறிக்கை வந்த பிறகு ரொம்பவே தள்ளாட்டம் கண்டுள்ளது. நடிகர் சங்க நிர்வாகிகளே கூண்டோடு கலைந்து விட்டனர். ஆளாளுக்கு ஒரு விமர்சனம் என்று சமீபகாலமாக எங்கு பார்த்தாலும் அட்ஜெஸ்ட்மெண்ட், நைட்ல ரூம் கதவைத் தட்டுவது என்பதே தான் பேச்சாக உள்ளது.
வலைதளத்தைத் திறந்தாலும் ஆளாளுக்கு நடிகர்கள், நடிகைகள் லிஸ்டை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். அட்ஜெஸ்ட்மண்ட் பற்றி ராதிகா பேசும்போது இது சினிமா உலகில் மட்டுமல்ல. எல்லா இடங்களிலும் நடக்கிறது என்கிறார். இதுகுறித்து மேலும் அவர் என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா...
Also read: காதலில் விழுந்த சாய் பல்லவி… 10 ஆண்டுக்கால லவ்வர் இவர்தானாம்.. அப்செட்டில் ரசிகர்கள்
ஹேமா கமிட்டி குறித்து நடிகை ராதிகாவிடம் ஆங்கர் நைட்ல வந்து கதவைத் தட்டுறது, நைட்ல வந்து டிஸ்டர்ப் பண்றதுன்னு எல்லாம் சொல்லப்பட்டுருக்கு. இது உங்க காலகட்டத்துல எப்படி இருந்ததுன்னு ஆங்கர் கேட்கிறார். அதற்கு ராதிகா சொன்ன பதிலைப் பாருங்க.
அது 60 காலகட்டத்துல இருந்தே இருக்கு. ஐ டோன்ட் நோ. இந்த மைன்ட் செட்டை என்னால புரிஞ்சிக்கவே முடியாது. நானும் சிரிச்சிக்கிட்டு கேட்டுட்டேன். நானும் கோபமா கேட்டுட்டேன். என்ன நினைச்சிட்டு வர்றீங்க எல்லாரும்? என கேட்கிறார் ராதிகா. நீங்க அதை எப்படி எதிர்கொள்வீங்கன்னு ஆங்கர் கேட்கிறார். அதற்கு ராதிகா நெத்தி அடியாய் பதில் சொல்கிறார்.
Also read: என்ன இது சிவகார்த்திகேயனுக்கு வந்த சோதனை? பேரைக் கேட்டதும் படத்தில் இருந்து விலகிய நடிகை
அந்த மாதிரி சிச்சுவேஷன் எனக்கு நடக்கல. அந்த மாதிரி யாரும் என் கதவைத் தட்டுனா மூஞ்சியே சிதைச்சிருப்பேன் அன்னைக்கே. ஆனா நிறைய பெண்கள் என் ரூமுக்கு வந்துருக்காங்க. நாங்க உங்க ரூமுல உட்கார்ந்துக்குறோம் ப்ளீஸ்னு சொல்வாங்க. நீங்கன்னா யாரும் பக்கத்துல வர மாட்டாங்கன்னு சொல்வாங்க. அவங்களைப் பொருத்தவரை அதனால் என்னன்னு இருந்துட்டாங்க.
ஆனா இப்போ அப்படி இல்லை. எல்லாம் படிச்சவங்க. தைரியமான பெண்கள் நிறைய பேரு வந்துருக்காங்க. அவங்களுக்கு எல்லாம் எப்படி சமாளிக்கணும்கறது தெரியுது. ஆனா அடுத்த கேட்டகரியில உள்ளவங்க பாதிக்கப்பட்டவங்கன்னு தான் சொல்ல முடியும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.