அரசியலுக்கு வர்றதுக்கு முன்னாடி கூட இருக்குற பெண்களுக்காக குரல் கொடுங்க... விளாசிய ராதிகா
நடிகைகளில் தைரியமானவர்களில் ஒருவர் ராதிகா. சமீபத்தில் ஹேமா கமிட்டி குறித்து தனது கருத்துகளை ரொம்பவே தைரியமாக முன்வைத்துள்ளார். மலையாளத் திரையுலகில் நடந்த அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி ஒட்டுமொத்தமாக தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்து உள்ளார்.
Also read: அந்த கெழட்டுப் பைய கூடலாம் முடியாது! மஞ்சுவாரியர் நோ சொன்னதுக்கான காரணம்
அந்த அட்ஜெஸ்ட்மெண்ட் அவரது அப்பா காலத்தில் இருந்தே நடப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் அது போன்ற ஒரு சம்பவம் அதாவது என் ரூமோட கதவை யாராவது திறந்தால் மூஞ்சை சிதைச்சிடுவேன்னு கோபாவேசமாக பேட்டி கொடுத்துள்ளார்.
அது மட்டுமல்லாமல் ஹேமா கமிட்டி குறித்தும் இது போன்ற அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்தும் வேறு என்னென்ன சொல்லி இருக்கிறார் என்று பார்ப்போமா...
நடிகையர் சங்கமா... நடிகர் சங்கத்துலயே மதிப்பு கிடையாது. இதுல நடிகைகள் சங்கமா. உலகத்துல எந்தத் தவறு நடந்தாலும் ஒரு சின்மயியா இருக்கட்டும். யாரா வேணாலும் இருக்கட்டும். நடிகைகளைத் தான் தப்பு சொல்றாங்க. இந்த ஆம்பளைங்கள யாராவது தப்பு சொல்றாங்களா? இப்போ நான் சொன்னா உங்களுக்கு நியூஸ்.
எல்லாரும் கேட்குற கேள்வி வந்து யாரது? அதுல தான் இன்ட்ரஸ்ட்டே தவிர இதை எப்படி சால்வ் பண்றதுன்னு யாருமே பேசல. இதுவரைக்கும் நானும் ரெண்டு மூணு நாளா தொடர்ந்து இன்டர்வியு கொடுத்துக்கிட்டு இருக்கேன். வெளிநாடு கிளம்புறேன்.
Also read: எங்க அப்பா காலத்துல இருந்தே நடக்குது.. பேர கேட்டா பயந்துருவீங்க! உண்மைய உடைத்த ராதிகா
இந்த நடிகர் வந்து இவ்ளோ வருஷமா ஆச்சே இவருக்கு வாழ்த்து சொல்லுங்கன்னு ஒரு பத்திரிகையாளர் எங்கிட்ட கேட்டாரு. நான் 46 வருஷமா இருக்கேன். 350 படங்கள் நடிச்சிருக்கேன். 4000 மணி நேரம் டெலிவிஷன்ல நடிச்சிருக்கேன். எனக்கு யாராவது வாழ்த்து சொன்னாங்களா? இல்ல. அப்போ கேட்காதே.
தமிழ்ல இருக்குற எல்லா நடிகர்களும் எங்கேயோ ஒரு வகையில அரசியலுக்கு வரணும்கற ஆசை. அரசியல்ல செயல்படுறவங்களுக்கு ஆசை. நீங்க எல்லாம் மக்களுக்காக செயல்படுறீங்களே. உங்க கூட இருக்குற பெண்களுக்காக ஒரு வார்த்தை சொல்லுங்க. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பாரதிராஜாவின் அறிமுகம், நடிக வேள் M.R.ராதாவின் மகள் என்று பார்க்கும்போது ராதிகாவின் தைரியம் குறித்து சொல்லவா வேண்டும்.