பார்க்க ரவுடி மாதிரி இருக்கார் இவரு டைரக்டரா?!.. பாரதிராஜாவை பார்த்து பயந்த ராதிகா!...

பதினாறு வயதினிலே படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகாமானவர் பாரதிராஜா. கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையை, அன்பை, கோபத்தை, அன்பை, வன்மதை என எல்லாவற்றையும் தனது படங்களில் காட்டியவர். இவர் வந்த பின்னர்தான் தமிழ் சினிமா ஸ்டுடியோவிலிருந்து வெளியேறி வாய்க்கால், வரப்பு பக்கம் போனது.
பாரதிராஜா இயக்கிய இரண்டாவது திரைப்படம் கிழக்கே போகும் ரயில். இந்த படத்திலும் கமல்ஹாசனையும், ஸ்ரீதேவியையுமே நடிக்க வைக்க நினைத்தார் பாரதிராஜா. ஆனால், சில காரணங்களால் இந்த படத்திலிருந்து கமல்ஹாசன் விலகிவிட ஸ்ரீதேவியும் அப்படத்திலிருந்து விலகினார். எனவே, புதுமுகங்களை நடிக்க வைக்க நினைத்தார்.
இதையும் படிங்க: வைரமுத்துவை கழட்டிவிட இளையராஜா பார்த்த வேலை!.. இப்படிப்பட்டவரா இசைஞானி!…
ஹீரோவா தெலுங்கில் சில படங்களில் நடித்த சுதாகர் முடிவானார். கதாநாயகிக்காக பல புகைப்படங்களை பார்த்தார் பாரதிராஜா. அப்போது, ஒரு புகைப்படத்தில் ஒரு பெண்ணுக்கு அருகில் கள்ளம் கபடம் இல்லாமல் சிரித்துக்கொண்டே ஒரு பெண் நின்றார். அவரின் சிரிப்பு பாரதிராஜாவுக்கு பிடித்துப்போனது. விசாரித்ததில் அவர் எம்.ஆர்.ராதாவின் மகள் ராதிகா என்பது தெரியவந்தது.
உடனே அவரின் வீட்டுக்கு போனார் பாரதிராஜா. அப்போது வீட்டில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிகொண்டிருந்தார் ராதிகா. பாரதிராஜாவின் தோற்றம் அப்போது டெரராக இருக்கும். எனவே, அவரை பார்த்த ராதிகா வீட்டுக்குள் ஓடி ஒளிந்துகொண்டாராம். அவரின் அம்மா கீதாவிடம் பேசினார் பாரதிராஜா.
இதையும் படிங்க: பாரதிராஜாவுக்கு பாடம் கற்பித்த இளையராஜா… அது சரி… ரெண்டுபேருக்கும் ஆசான் யாரு தெரியுமா?
உடனே ராதிகாவை அழைத்த கீதா ‘இவர் அவர் படத்துல உன்ன நடிக்க வைக்கணும்னு கேட்குறார். நீ என்ன சொல்ற’ எனக்கேட்க அம்மா கீதாவின் காதில் ‘பார்க்க ரவுடி மாதிரி இருக்கார்.. இவரு இயக்குனரா?’ என அவர் சொன்னது பாரதிராஜாவின் காதிலும் விழுந்துவிட்டது. ‘ராதிகாவின் அப்பா எம்.ஆர்.ராதாவிடம் கேட்டு சொல்கிறேன்’ என சொல்லி பாரதிராஜாவை அனுப்பி வைத்தார் கீதா.
ஒருவாரத்தில் பாரதிராஜாவை தொடர்புகொண்ட கீதா ‘ராதிகா நடிக்க அவரின் அப்பா சம்மதம் சொல்லிவிட்டார்’ என சொல்ல படப்பிடிப்பு துவங்கியது. ஆனால், ராதிகாவை பாரதிராஜாவை தவிர உதவி இயக்குனரக இருந்த பாக்கியராஜ் உட்பட யாருக்கும் பிடிக்கவில்லை. ஆனால், ராதிகாவின் கள்ளம் கபடம் இல்லாத சிரிப்பு இந்த படத்தின் கதாநாயகிக்கு பொருத்தமாக இருக்கும் என்பதில் பாரதிராஜா உறுதியாக இருந்தார். ராதிகாவுக்கு அப்போது தமிழ் சரியாக பேச வராது. சிங்களம் மற்றும் ஆங்கிலம் கலந்தே பேசுவார். ஆனாலும் வசனங்களை சொல்லிகொடுத்து அவரை நடிக்க வைத்தார் பாரதிராஜா. மேலும், அவரையே அப்படத்திற்கு டப்பிங்கும் பேச வைத்தார்.
அவரின் நம்பிக்கை வீண்போகவில்லை. படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. அப்படத்தின் வெற்றி ராதிகாவுக்கு பல பட வாய்ப்புகளையும் பெற்று தந்தது குறிப்பிடத்தக்கது.