தடபுடலாக நடைபெறும் திருமண ஏற்பாடுகள்.. வருங்கால கணவருடன் ரகுல் ப்ரீத் சிங்! வைரலாகும் புகைப்படம்

raghul
Actress Raghul preet singh: தமிழ் மற்றும் ஹிந்தியில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் என்.ஜி.கே என்ற படத்தில் சூர்யாவுடன் சேர்ந்து நடித்த ரகுல் ப்ரீத் சிங் சமீபத்தில் வெளியான சிவகார்த்திகேயன் படமான அயலான் படத்திலும் நடித்திருந்தார்.
ஹிந்தியில் பல படங்களில் நடித்த ரகுல் ப்ரீத் சிங் தனது நீண்ட நாள் காதலரான ஜாக்கி பாக்னானியை வரும் 19 ஆம் தேதி திருமணம் செய்ய இருக்கிறார். அதற்கான வேலைகள்தான் தற்போது நடந்து வருகிறது.
இதையும் படிங்க: விஜய்க்கு தமிழில் ‘க்’ தெரியாது!.. அவரோட பையனுக்கு தமிழே தெரியாது… கலாய்த்த பிரபலம்…

raghul
திருமணத்திற்கு முன் திருமண ஜோடிகள் மும்பையில் உள்ள விநாயகர் கோயிலுக்கு சென்று ஆசி வாங்கியுள்ளனர். அது சம்பந்தமான புகைப்படம்தான் இப்போது வைரலாகி வருகின்றது. இவர்கள் திருமணத்திற்கு பெரும் பொருட்செலவை செய்ய தயாராக இருக்கிறார்கள்.
இவர்களது திருமணம் கோவாவில் நடைபெற உள்ளதாம். அங்கு ஒரு ரிசார்ட்டில் நடக்க இருப்பதால் ஒரு நாள் இரவுக்கு 80000 வரை செலவாகுமாம். 40000 ஏக்கர் அளவு பரந்து விரிந்திருக்கும் அந்த ரிசார்ட் கடற்கரை ஓரமாக இருப்பதால் அங்கு உள்ள அறைகள் கடற்கரையை பார்த்து இருக்கும் விதத்தில் அமைந்திருக்குமாம்.
இதையும் படிங்க: கமலின் செண்டிமெண்ட் இந்தப் படத்திலும் ஒர்க் அவுட் ஆகுமா? ‘அமரன்’ பேருக்கு பின்னாடி இப்படி ஒரு விஷயமா

raghul
முதலில் இந்த ஜோடி வெளி நாட்டு முறைப்படி திருமணம் செய்ய நினைத்தார்களாம். அதன் படி பாலிவுட் தரத்தில் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் திருமணத்திற்கு குடும்பத்தார் மற்றும் முக்கிய நண்பர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்களாம். திருமணத்தை ஒரு பெரிய விழாவாக கொண்டாட இருக்கிறார்களாம். அதற்காக மூன்று நாள்கள் முன்பாகவே அதற்கான பணிகள் ஆரம்பித்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

raghul