வாங்குன காச திருப்பி கொடும்மா!..நடிகையை காப்பாற்றுவாரா சிவகார்த்திகேயன்!...

by Rohini |   ( Updated:2022-04-20 07:01:46  )
rahul_main_cine
X

ஆரம்பத்தில் ஒரு சில தமிழ் படங்களில் நடித்து சரியான முத்திரை பதிக்க முடியாமல் திணறியவர் நடிகை ரகுல் பிரீத் சிங். அவரால் தனக்கென்று ஒரு இடத்தை இன்றளவும் பிடிக்கமுடியவில்லை. அதனால் தெலுங்கு பக்கம் சென்றார்.அங்கு தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி வந்தார்.

rahul1_cine

இந்நிலையில் கார்த்தி நடிப்பில் வெளியான் தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ரீ-என்ட்ரி கொடுத்தார் நடிகை ரகுல் பிரீத் சிங். இந்த படத்தில் இவரின் நடிப்பிற்கேற்ற அங்கீகாரம் கிடைத்ததால் தமிழ், தெலுங்கு என படங்களில் நடித்து வருகிறார்.

rahul3_Cine

இருந்தாலும் மற்ற முன்னனி நடிகைகளை போல இவரால் ஜொலிக்க முடியவில்லை. இதனால் ராசியில்லாத நடிகை என முத்திரை குத்தப்பட்டார். இவர் நடித்த படங்கள் யாவும் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. இதனால் இவரை புதிய படங்களில் புக் செய்ய பல தயாரிப்பாளர்கள் தயங்குகிறார்கள்.

rahul3_cine

ஏற்கெனவே புக் சில படங்களுக்கு புக் செய்த தயாரிப்பாளர்கள் தாங்கள் கொடுத்த அட்வான்ஸ் பணத்தை இவரிடம் திரும்ப கேட்டு வருகின்றனர். இதனால் நடிகை அடுத்து சிவகார்த்திகேயனுடன் நடித்துக் கொண்டிருக்கும் அயலான் படத்தை நம்பி இருக்கிறாராம்.இந்த படம் கைகொடுத்தால் எல்லா பிரச்சினையும் தீர்ந்துவிடும் என நம்பிக்கையிம் இருக்கிறாராம்.

Next Story