பிக்பாஸ் முன்னாடியே ஒன்னா இருந்தோம்! போஸ்ட் வெளியிட்டு ஷாக் கொடுத்த ரைசா
இயல்பாகவே மாடலிங் துறையில் இருந்து வந்தவர் நடிகர் ரைசா வில்சன். தமிழில் ஒரு சில படங்களில் துணை நடிகையாக வலம் வந்த ரைசா பிக் பாஸ் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு வந்த முதல் வாய்ப்பு ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடித்து வெளிவந்த பியார் பிரேமா காதல் என்ற திரைப்படம் தான்.
அந்தப் படத்தில் சிந்துஜாவாக லீடு ரோலில் நடித்தார் ரைசா வில்சன். அந்தப் படத்திற்குப் பிறகு தனுஷ் ராசி நேயர்களே, வர்மா, எஃப்.ஐ.ஆர், பொய்க்கால் குதிரை, காபி வித் காதல் போன்ற படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். தமிழில் அறிமுகமான முதல் படம் வேலையில்லா பட்டதாரி 2 அந்தப் படத்தில் நடிகை கஜோலுக்கு உதவியாளராக நடித்திருப்பார் ரைசா.
ரைசா தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். நாள்தோறும் விதவிதமான போட்டோ சூட்டுகள் நடத்தி அந்தப் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்த நிலையில் ஒரு சமயம் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்ட புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்தப் புகைப்படத்தில் ரைசா மிகவும் சோகமாக அழுத நிலையிலும் அவருடைய முகமே சற்று வித்தியாசமாகவும் இருந்தது. அதற்கான காரணத்தை சில தினங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார் ரைசா. அதாவது கொரோனா காலத்திற்குப் பிறகு அவருடைய வாழ்க்கையில் நிறைய தோல்விகளே வந்து கொண்டிருக்கின்றதாம்.
மகிழ்ச்சி என்ற வார்த்தைக்கு இடமில்லாமல் போய்க்கொண்டிருக்கிறதாம். முழுவதுமாக கவலையுடனும் சோகமாகவுமே அவருடைய வாழ்க்கை நகர்த்துக் கொண்டிருப்பதாக கூறினார். இந்த நிலையில் அவரிடம் டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்பை பற்றி தொகுப்பாளினி ஒருவர் கேட்டார். அதற்கு பதில் அளித்த ரைசா நான் அந்த ரிலேஷன்ஷிப்பில் ஏற்கனவே இருந்திருக்கிறேன் என்றும் அதுவும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பாகவே இருந்திருக்கிறேன் என்றும் ஆனால் அது இப்போது இல்லை என்றும்.
ஒருவேளை அந்த ரிலேஷன்ஷிப் இப்போது இல்லை என்பதால் கூட என் கவலைக்கு உண்டான காரணமாக இருக்கலாம் என்றும் கூறினார். மேலும் மறுபடியும் பழைய ரைசாவை எப்பொழுது பார்க்கலாம் என்று அந்த தொகுப்பாளினி கேட்க அதற்கு ரைசா "யாராவது ஸ்பான்சர் பண்ணுங்க, வெளியூர் சென்று அங்கு போட்டோ சூட் எடுத்து நான் விதவிதமான புகைப்படங்களை பகிர்கிறேன் "என்று மிகவும் வேடிக்கையாக கூறினார்.
இதையும் படிங்க : ச்சை என்ன பட்டம் அது.?! எனக்கு சுத்தமாக பிடிக்கல.. ஆண்டவர் கமலை கடுப்பாக்கிய சம்பவங்கள்…