கல்யாணம் ஆன ஒரே காரணத்திற்காக ‘பராசக்தி’ பட வாய்ப்பை இழந்த பிரபல நடிகை!.. அடக் கொடுமையே!..
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்தில் ஏதாவது ஒரு படம் வெளியாகி ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்திவிட்டு செல்லும். சமீபத்தில் விக்ரம் படம் அந்த மாதிரியான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. அதே போல எம்ஜிஆர் ,சிவாஜி காலத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படமாக ‘பராசக்தி’ படம் அமைந்தது.
சிவாஜி அறிமுகமான முதல் படத்திலேயே கருணாநிதியின் அனல் பறிக்கும் வசனத்தால் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார் சிவாஜி. அந்த வசனத்தை அவரை தவிற வேற யாராலும் அந்த அளவுக்கு உச்சரிக்கமுடியாது. மேலும் அந்தப் படத்தின் மையக் கதாபாத்திரமாக இருப்பது சிவாஜிக்கு தங்கையாக இருக்கும் கதாபாத்திரம் தான்.
அவரைச் சுற்றி நடக்கும் பிரச்சினைகளால் தான் அந்த படத்தின் கதையே இருக்கும். சிவாஜிக்கு தங்கையாக நடித்திருப்பவர் நடிகை ஸ்ரீரஞ்சனி என்ற பழம்பெரும் நடிகை.ஆனால் அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு முதலில் கமிட் ஆன நடிகை பிரபல நாட்டிய மங்கையான ராஜசுலோச்சனாவாம்.
நடனத்தில் கைதேர்ந்தவர் ராஜசுலோச்சனா. நடன மேடையில் நடிக்க வந்தவர். எல்லா விதமான நடனத்தையும் கற்று தேர்ந்தவர். மாங்கல்யம் என்ற படத்தின் மூலம் முதன் முதலில் அறிமுகமானார் ராஜசுலோச்சனா.
இவர் தான் பராசக்தி படத்தில் சிவாஜிக்கு தங்கையாக நடிக்க வேண்டியவர். ஒரு வேளை நடித்திருந்தால் சிவாஜி மாதிரியே தமிழில் ராஜசுலோச்சனாவுக்கும் பராசக்தி படம் அறிமுகமான படமாக அமைந்திருக்கும். ராஜசுலோச்சனாவுக்கு 16 வயதிலேயே பரம்சிவன் என்பவருடன் திருமணம் நடந்திருக்கிறது.
இதையும் படிங்க : யாரு சொன்னா? விஜய் – சங்கீதா லவ் மேரேஜ்னு?.. உண்மையை போட்டுடைத்த ஷோபா!..
பராசக்தி பட வாய்ப்பு வரும் போது ராஜசுலோச்சனா கர்ப்பமாக இருந்தாராம். அதனால் தான் அந்தப் படத்தில் அவரால் நடிக்க முடியவில்லையாம். இந்த சுவாரஸ்ய தகவலை சித்ரா லட்சுமணன் கூறினார்.