கலைஞரின் வசனத்தை பேசமாட்டேன் என ஒற்றைக் காலில் நின்ற பிரபல நடிகை… அதுக்காக என்ன பண்ணாங்க தெரியுமா?

Kalaignar Karunanidhi
தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகையாக திகழ்ந்தவர் ராஜ சுலோக்சனா. இவர் 1953 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளிவந்த “குணசகரி” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து 1954 ஆம் ஆண்டு வெளியான “மாங்கல்யம்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இவர் கன்னடம், தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.

Rajasulochana
ராஜ சுலோக்சனாவின் இயற்பெயர் ராஜீவலோச்சனா. இவரது தந்தை ரயில்வே துறையில் பணியாற்றியதால் அவ்வப்போது இடமாற்றம் செய்யப்பட்டார். அப்போது சென்னைக்கு ஒரு முறை அவரது தந்தை இடமாற்றம் செய்யப்பட்டபோது அங்கே உள்ள ஒரு பள்ளியில் இவரை சேர்த்திருக்கிறார். அங்கே இவரது பெயர் என்ன என்று ஆசிரியர் கேட்க, அதற்கு அவர் ராஜீவலோச்சனா என்ற தனது பெயரை கூறினார். ஆனால் ஆசிரியரோ தவறுதலாக பதிவேட்டில் ராஜசுலோக்சனா என எழுதிவிட்டாராம். அதில் இருந்து அவர் தன்னுடைய பெயரை ராஜசுலோக்சனா என்றே மாற்றிக்கொண்டாராம்.
தமிழில் “மாங்கல்யம்” திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் முன்னணி நடிகருடன் நடித்திருக்கிறார் ராஜசுலோக்சனா. இந்த நிலையில் ஒரு முறை கலைஞர் கருணாநிதியின் வசனத்தை பேசமாட்டேன் என கூறினாராம். அதற்கு என்ன காரணம் என்பதை குறித்து இப்போது பார்க்கலாம்.

Kuravanji
1960 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன், சாவித்திரி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “குறவஞ்சி”. இத்திரைப்படத்திற்கு கலைஞர் கருணாநிதி வசனம் எழுதியிருந்தார்.

Rajasulochana
இத்திரைப்படத்தில் சாவித்திரிக்கு பதில் முதன்முதலில் நடிக்க இருந்தது ராஜசுலோக்சனாதான். அப்போது இத்திரைப்படத்திற்காக கலைஞர் எழுதிய வசனத்தை பார்த்த ராஜசுலோக்சனாவுக்கு அந்த வசனங்களின் மேல் அவ்வளவாக விருப்பம் இல்லையாம்.
அதாவது “கடவுளே உனக்கு கண்ணில்லையா” என்பது போன்று நாத்திக தொனியில் பல வசனங்கள் அதில் இடம்பெற்றிருந்ததாம். ராஜசுலோக்சனா தீவிர ஆன்மீக நம்பிக்கையுடையவர் என்பதால் அந்த வசனங்களை பேசி நடிக்க அவருக்கு விருப்பமில்லை. ஆதலால் கலைஞரிடம் வசனத்தை மாற்றி எழுதினால் நடிக்க தயார் என கூறியிருக்கிறார்.

Kalaignar Karunanidhi
ஆனால் கலைஞரோ “வசனத்தை மாற்ற முடியாது” என கூறி நடிகையையே மாற்றச்சொல்லிவிட்டாராம். அதன் பிறகுதான் அந்த படத்தில் சாவித்திரி நடித்திருக்கிறார்.