90களில் ரசிகர்களின் கனவுக்கன்னி...உள்ளத்தை மட்டுமல்ல....அந்த அழகையும் அள்ளித் தந்த ரம்பா
மூன்றெழுத்து மந்திரச் சொல்லைக் கொண்ட நாயகர், நாயகிகள் படங்களில் எப்போதுமே ஜொலிப்பார்கள் என்பது நாம் அறிந்த விஷயம். அந்த வகையில் நம்மை 90களில் கிறங்கடித்த கனவுக்கன்னி உள்ளம் கவர் கள்ளி என்று செல்லமாக அழைக்கப்பட்ட ரம்பாவைப் பற்றி இப்போது பார்ப்போம்.
13 வயசிலேயே சினிமாவில் அறிமுகம். தேசிய விருதும் சீக்கிரத்தில் கிடைத்தது. இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆங்கிலம், பெங்காலி, போஜ்புரி என தன் திறமைகளை பல மொழிகளிலும் கெத்தாகக் காட்டியுள்ளார்.
வேறு யாருமல்ல. தொடை அழகி ரம்பா தான். 90களில் இளைஞர்களின் கனவுக்கன்னி இவர் தாங்க. இவரைப் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்.
படிக்கவே இல்ல. ஆனா எல்லா மொழிகளுமே சரளமா பேசுவாங்க. அதெப்படி?
இவரோட இயற்பெயர் விஜயலெட்சுமி. இவருக்கு ஒரு அண்ணன் உண்டு. இவர் நடிக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டவர் இவரோட அப்பா தான். 5.6.1976ல் பிறந்தார். தெலுங்கு இவரது தாய்மொழி.
7ம் வகுப்பு படிக்கும்போது அப்பா சென்னைக்கு அழைத்து வந்தார். அப்போது இவருக்குத் தமிழ், ஆற்கிலம் தெரியாது. அதெல்லாம் பார்த்துட்டு ஆரம்பத்திலே பயந்துட்டார் ரம்பா.
இவருக்குப் பிரபல பள்ளியில் சீட் வாங்கிக் கொடுத்ததே டைரக்டர் ஹரிஹரன் தான். சர்கம் மலையாளப் படத்தில் அறிமுகப்படுத்தினார் டைரக்டர் ஹரிஹரன். இந்தப்படத்தில் இவரது பெயர் அமிர்தா. தொடர்ந்து ஆ ஒக்கட்டி அடகு என்ற தெலுங்கு படத்திலும் அறிமுகம்.
இந்தப்படம் பிளாக் பஸ்டர் ஹிட். இந்தப்படத்தில் இவரது கேரக்டர் பெயர் ரம்பா. தொடர்ந்து இவரது பெயர் ரம்பாவானது. இவர் தனது பெயரை விஜயலட்சுமின்னு சொல்லமாட்டாங்களான்னு ஏங்கி உள்ளார்.
தெலுங்குல நடிக்கும்போது இந்தில நடிக்கும்போது தமிழ்லயும் வாய்ப்பு கிடைக்குது. இவர் தனது குழந்தைப்பருவத்தை மிஸ் பண்ணியுள்ளார். நிறைய பிரண்ட்ஸ மிஸ் பண்ணியிருக்காங்க.
உழவன் படத்தில் ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். தொடர்ந்து இவர் உள்ளத்தை அள்ளித் தா என்ற படத்தில் இவரது நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.
கமல், விஜய், பிரபு, அஜீத், தளபதி என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் உழவன் படத்தில் 34 படங்கள் தமிழில் பண்ணியிருக்காங்க. 6 படங்கள் கேமராவை அதட பெண்சிங்கம் படம் தான் இவருக்கு கடைசி படம்.
3 ரோசஸ் படத்துல ரம்பாவுடன் சேர்ந்து ஜோதிகாவும், லைலாவும் நடித்தனர். கடன் வாங்கியே இந்தப்படத்தைத் தயாரித்துள்ளார் ரம்பா.
இவருக்கு ஒரு பெண் குழந்தை, ஆண்குழந்தை இருக்காங்க. சின்ன வயசுல இருந்து குக் பண்றது ரொம்ப பிடிக்கும். மானாட மயிலாட டிவி நிகழ்ச்சியில் நடுவராக வந்து சிறப்பித்துள்ளார்.
காதலா காதலா, நினைத்தேன் வந்தாய், பூமகள் ஊர்வலம், மின்சார கண்ணா ஆகிய படங்கள் இவர் நடிப்புக்குத் தீனி போட்டன. உள்ளத்தை அள்ளித்தா படம் இவருக்கு பெரும் புகழை அள்ளித் தந்தன.
இவர் நடித்த ஆங்கிலப்படம் குயிக் கன் முருகன். விஐபி, அடிமைச்சங்கிலி, சுந்தரபுருஷன் ஆகிய படங்கள் வருகையில் இவர் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்தார். இவரது படங்கள் என்றாலே இளம் ரசிகர்களின் கூட்டம் திரையரங்கை நிரப்பும்.
இந்தப்படத்தில் இவர் நடித்த அழகிய லைலா என்ற பாடல் இன்று வரை பார்க்கும் போதெல்லாம் மனதைக் கிறங்கச் செய்யும்.
தொழில் அதிபர் இந்திரகுமார் பத்மநாதன் என்பவரை மணம்புரிந்தார் ரம்பா. இவருக்கு 2 பெண், ஒரு ஆண் பிள்ளைகள் உள்ளனர்.