Actress Ramba: தமிழ் சினிமாவில் 90கள் காலகட்டத்தில் மிகவும் கோலோச்சிய நடிகையாக வலம் வந்தவர் ரம்பா. தொடையழகி என வர்ணிக்கப்படும் ரம்பாவின் தொடையை பார்க்கவே கூட்டம் கூட்டமாக திரையரங்குகளில் அலைமோதிய மக்கள் ஏராளம். விஜய், அஜித் , கார்த்திக், பிரபுதேவா என கோலிவுட்டில் இருக்கும் மிக முக்கியமான நடிகர்களுடனும் நடித்து புகழ்பெற்றவர்.
ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட ரம்பா தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.ரம்பாவை போல் இமிடேட் செய்ய விரும்புபவர்கள் அனைவரும் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரம் உள்ளத்தை அள்ளித்தா படத்தில் அமைந்த ரம்பாவின் அந்த இண்ட்ரோ சீன்தான். அதில் மர்லின் மன்றோ மாதிரியான சிவப்பு நிற கவுனை காற்றில் பறக்கவிட்டு வரும் காட்சி மிகவும் பிரபலமானது.
இதையும் படிங்க: எப்ப பாரு பொய் பேசும் திரை நட்சத்திரங்கள்!.. ரசிகர்களை காக்கா பிடிக்க அதையே செய்யும் விஷால்!..
அந்த ஒரு காட்சியால்தான் ரம்பாவும் புகழடைந்தார். அதிலிருந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனங்களை கவர்ந்தார் . இந்த நிலையில் சமீபத்தில் ரம்பாவின் பேட்டி ஒன்று திடீரென வைரலானது. அதில் அருணாச்சலம் படத்தின் போது திடீரென விளக்குகள் அணைக்கப்பட்டது என்றும் அந்த நேரத்தில் என் பின்னால் யாரோ தட்ட பின் அது ரஜினிதான் தட்டினார் என்று அப்புறம்தான் தெரியவந்தது என்றும்,
அது ரஜினி ஜாலிக்காக பண்ணியது என்றும் அந்தப் பேட்டியில் ரம்பா கூறியிருந்தார். இந்த பேட்டி இணையத்தில் வைரலானது. இதை பற்றி பிரபல திரை விமர்சகர் காந்தராஜிடம் கேட்ட போது ‘என்னமோ அந்த அம்மா காதல் காட்சியிலேயே நடிக்காத மாதிரி பேசிருக்கு. பெரும்பாலான முத்தக் காட்சியில் எல்லாம் நடிச்சிருக்காங்க. ஏன் ஒரு கன்னட படம். கிட்டத்தட்ட ப்ளூ ஃபிலிம் மாதிரியான படம்தான் அது.’
இதையும் படிங்க: ஸ்ட்ரெச்சர்ல தூக்கிட்டு போற அளவுக்கு என்ன நடந்தது? ஃபோட்டோ போட்டு ஷாக் கொடுத்த அருண்விஜய்
‘அந்த படத்தில் கூட ரம்பா நடிச்சிருக்கு. ரஜினி இந்த மாதிரி செய்திருக்கிறார் என்று சொன்னால் ஒரு பப்ளிசிட்டி கிடைக்குமே என்று இப்போது அதை ரம்பா பேசியிருப்பார்’ என காந்தராஜ் கூறினார்.
தமிழ் சினிமாவில்…
மாநாடு படம்…
போடா போடி…
Viduthalai 2:…
விடுதலை 2…