தமன்னாவால் குடும்பத்தில் வெடித்த பிரச்சினை! ரம்பா நிலைமை பாவம்.. ஏற்கனவே பிரிஞ்சது போதாதா?

Published on: August 27, 2024
rambha
---Advertisement---

Actress Rambha: தமிழ் சினிமாவில் 90கள் காலகட்டத்தில் ஒரு முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ரம்பா. விஜய் ,அஜித், கார்த்திக், பிரபு ,ரஜினி போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த ரம்பா தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத நடிகையாக இருந்து வந்தார். இவருக்கு என ரசிகர் கூட்டம் பெருமளவு இருந்தனர்.

இன்று வரை ரம்பாவுக்கு என ஒரு தனி கிரேஸ் இருந்து வருகிறது. சுந்தர் சி இயக்கத்தில் வெளியான உள்ளத்தை அள்ளித்தா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் ரம்பா. அதை தொடர்ந்து காதலா காதலா, அருணாச்சலம், மின்சார கண்ணா போன்ற படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு ரம்பாவுக்கு கிடைக்க 90, 2000 ஆண்டுகளில் அவர்தான் ஒரு முன்னணி நடிகையாக மாறினார்.

இதையும் படிங்க: அதுக்குள்ள 25 நாள் போஸ்டரா?.. அந்தகன் படத்தை கலாய்க்கும் புளூசட்ட மாறன்!…

இவர் 2010 ஆம் ஆண்டு இந்திரகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு நடிப்பதை தவிர்த்து வரும் ரம்பா தன் கணவர் குழந்தைகள் கவனத்தில் மிகவும் அக்கறையுடன் இருந்து வருகிறார். ஏற்கனவே இவருக்கும் இவருடைய கணவருக்கும் சில பல கருத்து வேறுபாடு ஏற்பட்டு சில காலம் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

அதன் பிறகு பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் சேர்ந்து இன்றுவரை ஒரு இணைபிரியாத தம்பதிகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் நடிகை தமன்னாவிற்கும் தனது கணவருக்கும் இடையேயான அந்த பாண்டிங் பற்றி ரம்பா கூறியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது .

இதையும் படிங்க: விஜயாவை அழுது சமாளித்த ரோகிணி… ஃபீல் பண்ணும் கோபி… வசமாக சிக்கிய ராஜீ…

ஏற்கனவே இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் ரம்பா தனது கணவருடைய இன்ஸ்டா பக்கத்தை ஃபாலோ செய்வதில்லை என கூறி இருக்கிறார். ஏனெனில் தனது கணவர் இன்ஸ்டா பக்கத்தை ஆரம்பித்ததும் தமன்னாவை தான் பாலோ செய்தாராம். அதிலிருந்து நான் என் கணவர் இன்ஸ்டா பக்கத்தை பாலோ செய்வதில்லை என கூறியிருக்கிறார்.

நெட்டிசன்கள் இந்த செய்தியை பார்த்ததும் தமன்னாவால் ரம்பாவுக்கும் அவருடைய கணவருக்கும் இடையே இப்படி ஒரு பிரச்சனையா என பேசி வருகிறார்கள். ரம்பாவின் கணவரை பொறுத்த வரைக்கும் அவருக்கு மிகவும் பிடித்த நடிகை தமன்னாதானாம். ஏற்கனவே அவர்ன் ஒரு புதிய கடை திறப்பு விழாவிற்கு தமன்னா தான் சிறப்பு விருந்தினராக வரவழைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கொட்டுக்காளி தோத்து போனதுக்கு காரணமே சிவகார்த்திகேயன்தான்!.. அட என்னப்பா சொல்றீங்க?!..

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.