டூயட் சாங்ல அது இல்லாம எப்படிமா?.. ரம்பாவின் பிடிவாதத்தால் கடுப்பேறிய படக்குழு.. ஹீரோ அப்படிப்பட்டவர்!..
தமிழ் சினிமாவில் 90களில் முன்னனி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரம்பா. தொடையழகி என்ற சிறப்புப் பெயரோடு ரசிகர்களின் கனவுக்கன்னியாகவே இருந்தார். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. மேலும் அனைத்து முன்னனி நட்சத்திரங்களுடனும் நடித்தார்.
அஜித், விஜய், ரஜினி, கார்த்திக், பிரபு என டாப் நடிகர்களின் ஜோடியாக வந்து ரசிகர்களையும் உற்சாகப்படுத்தினார். 1993ஆம் ஆண்டு வெளியான உழவன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ரம்பா. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, போஜ்பூரி, பெங்காலி என அனைத்து மொழிகளிலும் பல வெற்றிப் படங்களை கொடுத்திருக்கிறார்.
தனது இரண்டாவது படமான உள்ளத்தை அள்ளித்தா படத்தில் இவர் காட்டிய கவர்ச்சி அழகு ரசிகர்களை பச்சக் என்று ஒட்டிக் கொண்டது. அந்தப் படம் தான் இவரின் கெரியரில் ஒரு மைல் கல்லாக அமைந்தது. இன்றளவும் இவரை மேடைகளில் பார்த்தாலே அழகிய லைலா பாடலை போட்டுத்தான் பெருமைப் படுத்துவார்கள்.
இதையும் படிங்க : சுந்தர்.சியை வச்சு செய்யக் காத்திருக்கும் நடிகர்கள்.. ‘சங்கமித்ரா’ சந்திக்கப்போகும் பிரச்சினை…
அதன் பின் சுந்தரபுருஷன் என்ற படத்தில் லிவிங்ஸ்டனுக்கு ஜோடியாக நடித்தார் ரம்பா. அந்த படத்தில் தான் இப்போது மிகவும் பிரபலமாக இருக்கும் ஒளிப்பதிவாளரான ஆர்தர் வில்சன் இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார்..
இந்தப் படத்தில் ரம்பா நடிக்கும் போது லிவிங்ஸ்டன் தன்னைக் கட்டிப் பிடிக்கக் கூடாது என்று கூறினாராம். ஏனெனில் அவர் இரண்டாவது படத்தின் மூலமாக ரம்பா ஒரு முன்னனி நடிகை என்ற அந்தஸ்தை பெற்று விட்டார். அதனால் என்னவோ லிவிங்க்ஸ்டனுக்கு இப்படி ஒரு கண்டீசனை போட்டிருக்கிறார் ரம்பா.
அதனால் அந்த படத்தில் ஒரு காட்சியில் லிவிங்ஸ்டன் கட்டிப் பிடிக்க வரும் போது ரம்பா மறைகிற மாதிரி காட்சி வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இதைப் பற்றியெல்லாம் லிவிங்ஸ்டன் எதுவும் சொல்லவில்லையாம். முன்னனி நடிகை அந்தஸ்தில் இருக்கும் நடிகைகள் சொல்வது இதுதான் என்று ஜாலியாக எடுத்துக் கொண்டாராம். இந்த தகவலை ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் கூறினார்.